India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் கந்தசாமி தேவர் என்பவர் நேற்று(அக்.,21) தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரிடம் மக்கள் குறைதீர் நாள் முகாமில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பாட்டா குறிச்சி பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதனை மீறி அனுமதி வழங்கப்பட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
கனிம வளங்களை கொண்டு செல்ல போலி அரசு முத்திரை, அனுமதி சீட்டு அச்சடித்த பிறஸ் உரிமையாளர், பணியாளர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் நான்கு பேரை நேற்று தக்கலையில் வைத்து தனிப்படை உதவி ஆய்வாளர்கள் மகேஷ்வரராஜ் மற்றும் ஆறுமுகம் குழுவினர் கைது செய்தனர். மேலும் 2 கனரக வாகனங்கள் ஒரு சொகுசு கார் 2000 போலி அனுமதி சீட்டு, முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.. மோசடியில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணிப்பேட்டையில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், குருவராஜபேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட் தொழிற்சாலை பகுதிகள், திமிரி, விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையாத்தூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இளம் வயதிலேயே ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (அக்.23) மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில், முன்னாள் படை வீரர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
நாமக்கல், பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று மட்டும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடந்த 2 நாட்களாக, மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வந்த நிலையில், காலை 6 மணி அளவில் அதிகமாக மழை பெய்ய தொடங்கியது.
சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த நாகமணி மீது ஊராட்சிமன்றத்தை சேர்ந்த 10 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் நாகமணியின் கணவர் ஆதிக்கம் செலுத்துவதாக புகார்எழுந்துள்ளது.இந்நிலையில் நாகமணியை பதவிநீக்கம் செய்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்தவர்களில் 24 பேருக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 145 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 52 கோயில்களில் காலியாகவுள்ள இரவு பாதுகாவலா் பணியிடங்களில் சேர விருப்பம் உள்ள முன்னாள் படைவீரா்கள் இதில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்கள் அறிய நாகை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி 04365-299765 மூலம் தொடா்பு கொள்ளலாம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 411 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில், இலவச வீட்டு மனை பட்டா,பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்,இதர சான்றுகள்,குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகவுண்டனூர், தொட்டியபட்டி, நாகனூர், ஓமந்தூர், கீரனூர், சிங்கம்பட்டி, தேவர்மலை, வயலூர், திம்மாம்பட்டி, மாமரத்துப்பட்டி, மருதூர், வீரணம்பட்டி, வேப்பங்குடி, சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி – மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.