India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளராக பார்வதி பணியாற்றி வந்தார். இவர் ஈரோடு மாநகராட்சியில் பொறியாளர் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சதிஷ்குமார் வேலூர் மாநகராட்சியில் காலியாக உள்ள உதவி கமிஷனர் பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரு சில நாட்களில் இவர்கள் பொறுப்பேற்று கொள்வார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன்கள் அனந்தபத்மநாபன், அனந்தராமகிருஷ்ணன், அனந்தமகேஸ்வரன்,சகோதரர்கள் சண்முகநாதன்,சிவானந்தன், என ஏழு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நாளை(அக்.23) தூத்துக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதை ஒட்டி பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், ஆண்டலூர், கேட்டு புதுசத்திரம் புதன் சந்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பரமத்தி சாலை ஆகிய பகுதிகளில் விளம்பர பலூன்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடைவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி விளம்பர பலூன்கள் மற்றும் ட்ரோன் கேமரா பறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகாசியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மக்களவையில் விதி 377 இன் கீழ் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் எழுப்பிய கோரிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சிவகாசியில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக முறையான ஆய்வு செய்து பின்னர் அனுமதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மற்றும் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ளது என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
புதுப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ் (23) என்பவரின் வீட்டில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கனகராஜை கைது செய்தனர். மேலும் கனகராஜ் புதுப்பட்டினம் பழையாறு உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் உண்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள் என அரியலூர் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் முதலில் சிறிய டாஸ்க்கை அனுப்பி அதை செய்தவர்களுக்கு சிறிய தொகை அனுப்புவர். பிறகு பெரிய டாஸ்கை செய்ய முதலீடு செய்ய வேண்டும் என்று மோசடி செய்வர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவி குறித்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறாக பேசிய வழக்கில் தில்லைநகர் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை தில்லை நகர் காவல் நிலையத்திலிருந்து, திருச்சி சைபர் கிரைம் விசாரணைக்கு மாற்றப்பட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குன்றத்தூர், பரணிபுத்தூர் அருகே உள்ள மாங்காடு சாலையில் உள்ள சக்தி பேலஸில், புதிய மின்னணு குடும்ப அட்டை, கல்விக் கடன் மேளா மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரிகள் வழங்கும் விழா இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் நீர்வரத்தானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையிலிருந்து தென்பெண்னை ஆற்றில் 4290 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்க கூடிய கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
Sorry, no posts matched your criteria.