Tamilnadu

News October 22, 2024

நெல்லையில் 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

image

நெல்லையில் இன்று (அக்.22) 300 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை போலீசார் பிடித்துள்ளனர். பிடிப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரிசி கடத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி கடத்தல் குறித்து ஆங்காங்கே தீவிர சோதனை நடைபெற்று வருகின்றது.

News October 22, 2024

குமிரியில் பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று அறிவித்தார். அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 22, 2024

நித்தியானந்தா நீதித்துறைக்கு சவால் விடுகிறார் – ஐகோர்ட்

image

ராஜபாளையம் அருகே 4 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின்பேரில் அபகரிக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் நித்தியானந்தாவின் சொத்துக்களை நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என்றும், அவருக்கு எதிராக வழக்குகள் இருந்தும் அவர் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

தவெக மாநாடு வெற்றி பெற இபிஎஸ் வாழ்த்து

image

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

News October 22, 2024

பெருந்துறை வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்று

image

பெருந்துறை வட்டார வேளாண்மை துறையின் சார்பாக விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்ய மகோகனி, மலைவேம்பு, செம்மரம், சந்தனம் ,சவுக்கு ஆகிய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி  பயன்பெறலாம். விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் பட்டா சிட்டா நகலுடன் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் 6383537706 என அதிகாரி தகவல்.

News October 22, 2024

பர்லியார் முள் சீத்தாப்பழ சீசன் ஆரம்பம்

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் மருத்துவ குணம் மிக்க முள் சீத்தாப்பழத்தை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்த பழங்கள் புற்றுநோய்களுக்கு குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள்.

News October 22, 2024

விழுப்புரம் வழியாக சென்னை-ராமநாதபுரம் சிறப்பு ரயில்

image

சென்னை-ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) வியாழன், சனி, திங்கள் கிழமைகளில் தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.55 மணிக்கு ராமநாதபுரம் செல்லும். மறு மார்க்கமாக ரயில் (06104) வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்கிழமைகளில் ராமநாதபுரத்தில் புறப்பட்டு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில்கள் விழுப்புரம், கடலூர், சீர்காழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 22, 2024

தாளப்பட்டி முருகன் கோவில் தேய்பிறை சஷ்டி வழிபாடு

image

கரூர் மாவட்டம் தாளப்பட்டி பகுதியில் உள்ள கிராமத்தில் முருகன் கோவிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் ,விபூதி, கரும்புச்சாறு சீயக்காய் போன்ற மூலிகை பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு , முருகனுக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்தபின்னர் தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News October 22, 2024

காஞ்சி மக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து, நேரடியாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரக் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமும் புகார்களை தெரிவிக்க 96777 36557 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News October 22, 2024

குழுமூர் புத்தர் சிலை பாதுகாக்கப்படுமா?

image

குழுமூர் கிராமத்தில் உள்ள புத்தர் சிலையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ஆண்டுக்கு முன்பு சமூக விரோத கும்பலால் சிலையின் தலைப்பகுதி வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது. 

error: Content is protected !!