India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர், சேவூர், முதலிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நேற்று முந்தினம் இரவு, பணி முடிந்து, பைக்கில் வீடு திரும்பியுள்ளார். சேவூர் பவர் ஹவுஸ் அருகே வந்தபோது, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த தங்கராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று இரவு கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் ஆகிய பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதேபோல், அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கையை சோ்ந்த கணேசன் என்பவரிடம் வீட்டுக்கு சொத்து வரி பெயா் மாற்றம் செய்ய சிவகங்கை நகராட்சி வரிவசூலிப்பாளர் பாலமுருகன் ரூ.9,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாயை பாலமுருகனிடம் நேற்று கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து பாலமுருகனை கைது செய்தனர்.
புதுச்சேரி காவல் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, புதுச்சேரி காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 135 தலைமைக் காவலர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை வெள்ளியங்கிரி மலையேறும் போது காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். 6 வது மலை அருகே நேற்று அதிகாலை வரும் போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவர் உடல் கீழே கொண்டு வரப்பட்டது.
துறையூர் அருகே நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தின்போது வெடி வெடித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர் நான்காம் கேட் அருகே டூவிலரில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதற்கு நஷ்ட ஈடு கோரி கார் உரிமையாளர் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் மீது துரைசிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரருக்கு ரூ.1,14,06,486 நஷ்ட தொகை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் திடீரென பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Sorry, no posts matched your criteria.