Tamilnadu

News April 12, 2025

கடன் தராததால் வங்கி ஊழியருக்கு கத்தி வெட்டு

image

செய்யாறு அருகே வீடு அடமான கடன் தர மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், அடமான கடன் பெற வந்தார். இவர் பல வங்கிகளில் பணத்தை வாங்கி சரியாக கட்டவில்லை என்பதை அறிந்த வங்கி ஊழியர் தனுஷ் கடன் வாங்கி தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தை தனுஷை தனியே வரவைத்து கத்தியால் வெட்டினார்.

News April 12, 2025

பைக் வீலில் மின்சார வயர் சிக்கி மின்சாரம் தாக்கி பலி

image

திசையன்விளை அருகே இடையன்குடி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெண்ணிமலை (48). லோடு தொழிலாளி. இவர் நேற்று (ஏப்.11) காலை தோட்டத்திற்கு வாழைத் தார் வெட்டுவதற்கு சென்றுள்ளார். பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது அவர் சென்றுள்ளார்.பைக்கின் சக்கரத்தில் மின்கம்பி சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .

News April 12, 2025

டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

image

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.

News April 12, 2025

திண்டுக்கல்லில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

ஒட்டன்சத்திரத்தில் கொலை வழக்கில் கைதான சூர்யா(26) , சிறுமி பாலியல் வழக்கில் கைதான வினித் குமார்(24), ஆபாச வீடியோ வழக்கில் கைதான செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 3 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

News April 12, 2025

கிருஷ்ணகிரியில் தீ விபத்து மாடு, கன்று குட்டி பலி

image

கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பா; நேற்று மதியம், 3:00 மணிக்கு இவரது வீட்டின் அருகே கொட்டகையில் திடீரென தீப்பிடித்தது. தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சினையாக இருந்த ஒரு கறவை மாடு மற்றும் கன்று குட்டி தீயில் கருகி உயிரிழந்தது.

News April 12, 2025

வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

image

கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுாரில் வசிப்பவர் வினோத்குமார், (39). நேற்று அதிகாலை 5:30 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம நபர், வினோத்குமாரின் வீட்டுக் கதவை இரும்பு கம்பியால் பிளந்து, உள்ளே நுழைந்துள்ளார். பின், உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மம்தாஸ்ரீ அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2025

ஈரோடு: விஷம் குடித்து பெண் தற்கொலை!

image

ஈரோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவரது மனைவி சினேகா. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்நிலையில் மதன்ராஜ் அடிக்கடி சந்தேகப்பட்டு சினேகாவிடம் பிரச்சனை செய்து வந்தார். சம்பவத்தன்று, மதன்ராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து பிரச்னையில் ஈடுபட, அதனை வாங்கி சினேகாவும் குடித்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் சினேகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 12, 2025

காட்பாடி அருகே ரயில் மோதி வாலிபர் பலி

image

காவனூர் லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது வாலிபர் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 12, 2025

மதுரை அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

image

செக்கானுாரணி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 24, லாரி டிரைவர். இவர் நேற்று திண்டுக்கல் மதுரை 4 வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார்.குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்தது.லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் இறந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர்களுக்கு SHARE செய்து தினமும் லாரி எடுக்கும் முன் டயரை செக் பண்ண சொல்லுங்க.

News April 12, 2025

கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான் குப்பத்தை சேர்ந்தவர் சீதாராமன், விவசாயி. இவர் கடந்த, 10ஆம் தேதி இரவு  தனது பைக்கில், வாழவந்தான்குப்பத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கார், திடீரென பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!