India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புழலை சேர்ந்தவர் மணி (54) லாரி ஓட்டுனர். இவரது லாரியில் மணியும் ரங்கன் (60) என்பவரும் மளிகைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புழல் வழியாக திருத்தணிக்கு சென்றனர். அப்போது மழை பெய்ததால் மளிகை பொருட்கள் நனையாமல் இருக்க ரங்கன் லாரியின் பின் பக்கத்தில் நின்று தார்ப்பாயை இழுத்து கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு லாரி ரங்கன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதுவை மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மீன்வளங்களை பாதுகாக்கும் வகையில் வரும் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிப்பு தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. மேலும், அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்ட விசை படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதை உங்க மீனவ நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 8 அங்கன்வாடி பெண் பணியாளர்கள், 13 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 43 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமன செய்யப்பட உள்ளன. இம்மாதம், 24ம் தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 104 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. ஊதியமாக ரூ.3,000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும். இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் இங்கே <
தேனியில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 2024-25 ஆம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் <
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள எட்டுக்கை மாரியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால், பூமி மட்டத்தில் இருந்து கீழ்நோக்கி பல படிகள் இறங்கி தான் செல்ல வேண்டும். குழந்தை வரத்தை கொடுப்பதில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் சூலத்தில் காகிதம் அல்லது உலோகத் தகட்டில் வேண்டுதல்களை எழுதி கட்டி வைத்தால் வேண்டுதல் வெகு சீக்கிரத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் இங்கே <
லால்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின், பெரம்பலூர் துணை பயிற்சி நிலையத்தில் 2024-25-ம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 17வயது பூர்த்தி அடைந்தவர்கள் சேர <
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 139 (51+6+82) சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஏப்.,28 மாலை 5.45 மணிக்குள், தொடர்புடைய நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சமர்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.
Sorry, no posts matched your criteria.