India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*
இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வஉசி துறைமுகம் நடப்பு ஆண்டில் ( 2024 – 25 ) 2635 காற்றாலை பிளேடுகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே வேளையில் 2030 காற்றாலை பிளேடுகளை மட்டுமே கையாளப்பட்டிருந்தன. தற்போது முந்தைய ஆண்டை விட 29.80% காற்றாலை பிளேடுகளை கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வருமாறும், வரும் செவ்வாய்க்கிழமை 15.04.2025 காலை 9:00 மணி முதல் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவுறுத்தப்படுள்ளது.
அதிமுக ஆட்சியில் பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்களுக்காக மக்கள் மீண்டும் அதிமுக, பா.ஜ., கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் என்பதால் அதிமுக, பா.ஜ.க கட்சியினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
சுடலைமாட சுவாமியை காவல் தெய்வமாக கொண்டு வழிபடுபவர்கள் தென் மாவட்டங்களில் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு கோவில் தான் ஆறுமுகமங்கலம் ஹைகோர்ட் மகாராஜா சுடலைமாட சுவாமி கோவில் .இவர் சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாக பிறந்தவர் என்று கூறப்படுகிறது. பார்வதிதேவி கைலாயத்தில் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில் விளக்கின் சுடரில் இருந்து வரும் வெளிச்சத்தில் பிறந்ததால் சுடலைமாடன் என்ற பெயரை கொண்டார்.
தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சித்திரை திருவிழாவையொட்டி ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி தஞ்சை கோட்டத்தில் உள்ள தஞ்சை, மன்னார்குடி, பாபநாசம் தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் உள்ள துணை தபால் அலுவலகங்களில் நடக்கிறது.
குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782 கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்திற்கான பறவையினம் தேர்வுசெய்ய, பொதுமக்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. சேலம், ஆத்தூர் வனக்கோட்டம் மற்றும் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நமது சேலத்திற்கான பறவையை தேர்வு செய்ய, பொதுமக்களிடம் விருப்பங்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் சேலத்தின் பறவையினை தேர்வு செய்ய இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் மே-4 வெளியிடப்படும்.
நெல்லை மாவட்டத்தில் கனிம வளம் கையாளுதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கனிம வள சுரங்கங்களை பயன்படுத்துதல் தொடர்பான உரிமைகள் மற்றும் அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் வரும் ஏப்.15-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகவே கனிமவள தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று (ஏப்.12) அறிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த<
Sorry, no posts matched your criteria.