India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் ஸ்டார் அகடாமி டென்னிஸ் பயிற்சி மையம் வரும் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 20 மாணவர்கள், 20 மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். 12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். இதற்கான தேர்வு வரும் 28ம் தேதி நடக்கிறது. தகுதியின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த வட்டாரங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஈரோடு,திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர் நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல்.12) நண்பகல் 10மணி முதல் மாலை 4 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பிற்பகல் முதல் இரவு வரை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தேனி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள், புகார்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம். திருவேங்கடம் தாசில்தார் – 7708613515 , சங்கரன்கோவில் – 9445000670 , சிவகிரி – 9445000679, ஆலங்குளம் – 9445000678 , வீரகேரளம்புதூர் – 9445000677, கடையநல்லூர் – 9442224212, செங்கோட்டை தாசில்தார் -9445000676, தென்காசி தாசில்தார் – 9445000675. *SHARE IT*
தென்காசி, கடையம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆய்வாளர் மேரி ஜேமிதா என்பவர், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் ஆள் கடத்தல் வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ரூ.30ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேரி ஜெமிதாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மற்றும் பா.ஜ. கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. பொதுமக்களிடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக மகத்தான வெற்றியைப் பெறும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி கூட்டணி அமைத்துள்ளார். தமிழகத்திற்கு அவரது வருகை வெற்றிக்கு அடையாளமாக உள்ளது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
தென் மத்திய ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட கோண்டியா ரயில்வே நிலைய பகுதியில் 3- வது லைன் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் வடக்கு- கோர்பா எக்ஸ்பிரஸ் மே 1-ம் தேதியும், கோர்பா- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் மே 3-ம் தேதியும், பிலாஸ்பூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மே 5- ம் தேதியும், எர்ணாகுளம்- பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் மே 7- ம் தேதியும் உள்பட 6 ரயில்கள் முழுமையாக ரத்து!
Sorry, no posts matched your criteria.