India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(அக்.23) வழக்கம் போல் பள்ளி, கல்லூரி இயங்கும் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆம்பூர் நகராட்சிக்கு புதிய ஆனையாளராக பொறுப்பேற்ற முத்துசாமி அவர்கள் (இன்று அக்.22)ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் அவர்களை எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் ஆம்பூர் நகராட்சி கணக்காளர்கள் மதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி வடகிழக்கு பருவ மழை மழைக்கால காவல்துறை அவசர உதவி எண்கள் 24 மணி நேரத்துக்கும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி 9884098100,04172-270112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் whatsapp எண் 9677923100 தொடர்பு உதவிக்கு அழைக்கலாம். மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்து தகவலை தெரிவிக்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பள்ளி முடிவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்களை வீட்டிற்கு பாதுகாப்புடன் அனுப்புமாறு உத்தரவிட்டார். எந்த வித காரணத்திற்கு சிறப்பு வகுப்புகளை ஏதும் இன்று அக்.22 மாலை எடுக்கக் கூடாது என்பது மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவர் பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் பருவமழையினால் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் கி.மீ 47/8 ல் மாற்றுப்பாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால் சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு அமைத்து மாற்றுப்பாதை செல்ல மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். தர்மபுரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.22) இரவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
சாலையில் நடந்து செல்லும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். அது உங்களைச் சுற்றியுள்ள ஆபத்துக்களுக்கும், விபத்துக்களுக்கு வழிவகுக்கும். கவனக்குறைவாக நடந்து கொள்ளும்போது, வாகனங்கள், சைக்கிள்கள், மற்றும் 2 சக்கர வாகனங்கள் மீதான கவனம் சிதறலாம். செல்போனைப் பயன்படுத்துவதால், தெருக்களையும் கடக்கும்போது விபத்துக்கள் ஏற்படும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.