India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஆன்லைனில் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக பல போலியான கடன் செயலிகள் உள்ளது) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மோசடிகளில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை, தகுதியுரையும் வழங்கப்படுகிறது. செங்கை மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பம் அளிக்க www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து உரிய விவரங்களுடன் காஞ்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் முன்னிலையில், நேற்று (ஆக.06) சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளின் தொடர்பாக ரூ.45,83,671 பணம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை நிகழ்வில் கலந்துகொண்டார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசாபுரம் வரை உள்ள பகுதியில், கடைகள் அமைக்கவும் வியாபாரம் செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு கடைகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 வழக்குகளில் மீட்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் பணத்தை ஆவடியில் உள்ள ஆவடி காவல் ஆணையராகத்தில் காவல் ஆணையாளர் கி.சங்கர் நேரில் உரியவர்களிடம் வழங்கினார். இணைய வழி பணப்பரிவர்தனைகளில் எப்போதும் விழிப்போடு இருங்கள். புகார்களுக்கு 1930 ஐ தொடர்பு கொள்ளவும்.
திருவண்ணாமலையை சேர்ந்த மோனிஷா (26), மோகன்ராஜ் (27) ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து 2023ல் கடலூரில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். சமீபமாக மோகன்ராஜ் சரியாக பேசவில்லை எனக்கூறி, ஜூலை 27ல் அவர் வீட்டில் கேட்டபோது மோனிஷாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து (ஆகஸ்ட்-07) விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஆகஸ்ட்-7) வெளியிடப்பட்ட விலை நிலவரப் பட்டியலின்படி, எள் அதிகபட்சமாக ரூ.8,680-க்கும், மக்காச்சோளம் ரூ.2,529-க்கும், மணிலா அதிகபட்சமாக ரூ.8,420-க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
பரமக்குடி சுந்தரராஜ பவனத்தில் பரமக்குடி நகராட்சி 14,15 வார்டுகள், மண்டபம், பேரூராட்சி திருமண மண்டபத்தில் 10 – 18 வார்டுகள், மேலப்பார்த்திபனூர், சமுதாயக்கூடம், நம்பதாளை புயல் காப்பகம், பாண்டியூர் சமுதாயக்கூடம், பெரியபட்டிணம் சமுதாயக்கூடம், ஆகிய இடங்களில்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆக. 8) நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் கோளிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், சித்தேரிமேடு, திருப்பருத்திகுன்றம். வாலாஜாபாத் வட்டாரத்தில் தண்டலம், நெல்வாய், களியனுார் உள்ளிட்ட இடங்களில் நாளை(ஆகஸ்ட். 8) காலை 10:00 மணிக்கு, ‘உழவரை தேடி வேளாண்’ உழவர் நலத்துறை திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயன் பெறலாம் என காஞ்சிபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு ஏஐடியுசி அகில இந்திய தலைவர் சங்கர் பேட்டியளித்தார். மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலணிகள், கையுறை, ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.