Tamilnadu

News August 7, 2025

புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

image

பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமான ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பத்தினர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய 0413-2334277 என்ற எண்ணை அழைக்கலாம். பிறர் பயன் பெற பகிரவும்

News August 7, 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தேதி நீட்டிப்பு

image

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 19.06.25 முதல் நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ-யில் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று (ஆக.7) தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

ராம்நாடு: கூட்டுறவு வங்கியில் வேலை.. உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 (17+15) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் www.drbramnad.net என்ற தளத்திற்கு சென்று ஆக. 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யப்வும். ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 7, 2025

ராணிப்பேட்டை: இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க…!

image

சர்க்கரை நோயாளிகளுக்காவே அரசு “பாதம் காப்போம்” திட்டதை செயல்படுத்தி வருகிறது. இதில் பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை செலவில்லாமல் இலவசமாக பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டால் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் செயற்கை கால்களை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இதற்கென Diabetic Foot Clinic பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.

News August 7, 2025

தி.மலை: இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க

image

சர்க்கரை நோயாளிகளுக்காவே அரசு “பாதம் காப்போம்” திட்டதை செயல்படுத்தி வருகிறது. இதில் பரிசோதனை, சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றை செலவில்லாமல் இலவசமாக பெறலாம். ஒருவேளை அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டால் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மூலம் செயற்கை கால்களை பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இதற்கென Diabetic Foot Clinic பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு சென்று இத்திட்டத்தில் சிகிச்சை பெறலாம்.

News August 7, 2025

நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 7, 2025

கள்ளக்குறிச்சி: தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி….?

image

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார்&அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம்(04151-294600)புகாரளிக்கலாம். *இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News August 7, 2025

நெல்லையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டத்தின் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

தி.மலை: ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தேசிய குடற்புழு நீக்க நாள் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட உள்ளது. அதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 லட்சத்து 37 ஆயிரம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 18 ஆம் தேதி மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

image

கிருஷ்ணகிரி (கி.மா) இளைஞரணி செயலாளர் கார்த்திக் தலைமையில் கிருஷ்ணகிரி நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!