Tamilnadu

News April 19, 2025

கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி 

image

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*

News April 19, 2025

வெயிலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க ஆலோசனை

image

தேனி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது. உலர்ந்த தீவனங்கள், குச்சி புண்ணாக்கு, தாது உப்புக்கள் ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News April 19, 2025

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

image

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2025

5 அறிக்கைகளை வெளியிட்டார் முதல்வர் 

image

குன்றத்தூரில் இன்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, புவிசார் குறியீடு பெறுவதற்கு வழங்கப்படும் மானியம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன பொறியியல் உதிரிப்பாக நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். பழந்தண்டலில் சாலை கட்டமைப்பு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அறிக்கைகளை வெளியிட்டார்.

News April 19, 2025

ஊராட்சி மன்ற தலைவர்கள் பச்சை திறமையில் கையெழுத்திட தடை

image

திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் பச்சை நிற மையை பயன்படுத்தி வருவதால் அது குறித்து உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாணை நிலை எண்: 151, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எ) துறை, நாள்: 21.10.2010-ன் படி தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள் பச்சை நிற மையை பயன்படுத்துவதை தடை செய்து ஊராட்சி உதவி இயக்குனர் உத்தரவு

News April 19, 2025

இயற்கை எழில் கொஞ்சும் தியாசபிகல் சொசைட்டி

image

அன்னிபெசன்ட் அம்மையாரால் 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரம்மஞான சபையின் தலைமையகம் ‘தியாசபிகல் சொசைட்டி’ சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. சமத்துவத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சபை, தற்போது இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாகவும் விளங்குகிறது. உலகப் புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இந்த பூங்காவில் அமைந்துள்ளது. உயிர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு அடையாளமாகவும் இந்தப் பூங்கா திகழ்கிறது.

News April 19, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் குரூப் 4 மாதிரி தேர்வுகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இத்தேர்வானது வருகின்ற 22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இத்தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ரூ.88 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தனது தங்கை பவித்ராவிற்கு அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணி பெற்று தருவதாக கூறியுள்ளார். அதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த சூரஜ் என்பவரிடம் ரூ.88 லட்சம் கொடுத்துள்ளார். அவர் போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்துள்ளார். சிரஞ்சீவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சூரஜை நேற்று (ஏப்.18) கைது செய்தனர்.

News April 19, 2025

வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

image

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 19, 2025

கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டையில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 25 முதல் 15 தேதி வரை நடைபெறுகிறது.  இந்த முகாம் பற்றி மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜே.யூ சந்திரகலா தெரிவித்தார்.

error: Content is protected !!