Tamilnadu

News August 7, 2025

+1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு துவக்கம்

image

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி நேற்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இன்று, நாளை மற்றும் 11ம் தேதிகளில் குருசுக்குப்பம் அரசு பள்ளிகயில் கலந்தாய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

மதுரையில் இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

மதுரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை 0452-2580259 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News August 7, 2025

தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 7, 2025

கன்னியாகுமரி 5200 மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

image

கன்னியாகுமரி மீனவர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி கடல் பகுதியில் தூண்டில் வளைவை நீட்டிப்பு செய்யக்கோரி கன்னியாகுமரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.7) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 5200 பேர் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News August 7, 2025

விருதுநகர்: ரயில்வே வேலை… இன்றே கடைசி!

image

விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

சேலம்: 8th முடித்தாலே அரசு வேலை! APPLY NOW

image

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் 58,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <>இங்கே கிளிக்.<<>>(SHARE)

News August 7, 2025

விழுப்புரம்: பெற்றோரை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை

image

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு “அன்பு கரங்கள்” என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியுடைய குழந்தைகள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News August 7, 2025

ஈரோடு அரசு ஐடிஐயில் தொழில் பழகுனர் பயிற்சி முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐயில், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, ஈரோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி தொழில் பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

News August 7, 2025

தூத்துக்குடி: பெண்களே இந்த நம்பரை உடனே SAVE பண்ணுங்க..

image

தூத்துக்குடி மக்களே, வரதட்சணை தடைச் சட்டம், 1961ன்படி, மாவட்ட சமூக நல அலுவலர்கள் வரதட்சணை தடுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையின் பரிந்துரையின் பேரில், வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களை இவர்கள் விசாரிக்கின்றனர். நீங்கள் வரதட்சணையால் பாதிக்கப்பட்டிருந்தால் இலவச செல்போன் எண்ணான 181 அல்லது 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவுங்கள்*

News August 7, 2025

கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!