India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் குடிமங்கலம் பகுதியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவரை பிடித்த போலீசார், அவரை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து மணிகண்டன், காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டுவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் மணிகண்டம் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்/ ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. இந்த முகாம், பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல் கண்ணன் இந்துக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. ITI, டிப்ளமோ, பொறியியல், செவிலியர்கள் & டிகிரி படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்க பகுதியில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்க
குமரிக்கு நண்பர்களாவோ, குடும்பமாகவோ சுற்றுலா செல்பவர்களா நீங்க.. இனிமே தங்குவதற்கு அதிக பணம் செலவழித்து LODGE தேடி அலைய வேண்டாம். உங்களுக்காகவே அரசு போக்குவரத்துத்துறையின் மூலம் பயணிகள் தங்கும் விடுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சமாக சாதாரண அறைக்கு ரூ.280ம், டீலக்ஸ் A/C அறைக்கு ரூ.1500ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பரை 94877 11020 SAVE பண்ணிக்கோங்க. *ஷேர்*
புதுச்சேரியில், யோகாசன சாம்பியன்ஷிப் 2025 போட்டி வரும் 10ம் தேதி லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, 10, 14, 18, 28, 35, 45 மற்றும் 55 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க <
ஆம்பூரில் உணவுத் திருவிழா, மரபு விளையாட்டு திருவிழா, மரபு விதைத் திருவிழா வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 – இரவு 8 வரை ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயுள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி இலவசம். மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த week end-க்கு பிளான் ரெடி.
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக “DRUG FREE TN” என போதை பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 9 காலை 5:30 மணியளவில் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி நேதாஜி ஸ்டேடியம் வரை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 30 வயது வரை ஆண்/பெண், 30 வயதிற்கு மேற்பட்டவருக்கான ஆண்/பெண் என 2 பிரிவுகளில் நடைபெற உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை (ஆகஸ்ட் 8) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
அரியலூர் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 28 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
தேனி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7, 2025) பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. ஹரே ராம நாம கீர்த்தனம் பெரியகுளத்தில் நடைபெற உள்ளது. கனரா வங்கி சார்பாக இலவச பயிற்சி முகாம் மற்றும் தேனி கம்மவார் கல்லூரியில் போட்டித்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை இன்று நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.