Tamilnadu

News November 19, 2024

குழந்தைகள் நல குழுவிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதால் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை துறை அலுவலகத்திலும், http:/dsdcpimms.tn.gov.in இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

News November 19, 2024

மாணவியின் புகைப்படம் வைரல் – வழக்கு

image

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் 22 வயது மாணவி ஒருவர் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் படித்து வருகிறார். வரலாறு படிக்கும் மாணவரான சூர்ய நாராயணன் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, பிற மாணவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இந்நிலையில்,  மாணவியின் புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News November 19, 2024

சென்னிமலை அருகே ஏழு பேர் கைது

image

சென்னிமலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சென்னிமலை அடுத்த முருகன் கோவில் பாறை என்ற இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கார்த்தி, அருணாச்சலம், சந்தோஷ் குமார், பரமசிவம் குருசாமி ஆகியோர் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர். 

News November 19, 2024

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை

image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டு முழுவதும் பல லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள நான்காவது சரக்கு தளத்தில் 29,212 டன் நிலக்கரி கையாண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 25,900 நிலக்கரி கையாண்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News November 19, 2024

திருவாரூர் மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!

News November 19, 2024

திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டையில் திமுக மகளிர் மற்றும் தொண்டரணி, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைச்சர் காந்தி வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாகிகளுக்கு திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசுவாசம் பள்ளி நிறுவனர் கமலஹாந்தி கலந்து கொண்டார்.

News November 19, 2024

மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர் நியமனம்

image

கடலூர் தெற்கு மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பி.பி. கே சித்தார்த்தன் அவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளராக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அவரின் பணி சிறக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்தி வணங்கினார்கள்.

News November 19, 2024

திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (KYC Update செய்ய வேண்டும் என வரும் போலியான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 19, 2024

சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள்

image

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் மூக்குக்கண்ணாடி உள்ளன.

News November 19, 2024

30 இடங்களில் கண் பரிசோதனை முகாம்

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், விஷன் ஸ்பிரிங் இணைந்து நாளை (நவ.20) இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் வசிக்கும் 30 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.