India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று (ஆக.7) சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, அடையார், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<
காஞ்சிபுரத்தில் இன்று (ஆக.7) மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் வட்டாரம், வாலாஜாபாத், குன்றத்துர் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை<
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் (ஆகஸ்ட் 6) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் 11 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் சரகத்திற்குட்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யும் ஜவுளி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர், பவன்குமார் திறந்து வைத்து பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், புகார் இருந்தாலும் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உடனே அழைக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, திருநின்றவூர், சோழவரம், பள்ளிப்பட்டு, பூண்டி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள<
ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நாளை ஆகஸ்ட் 7 கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் நேரம் காலை 9மணி முதல் மாலை 3மணி வரை. மேல்விஷாரம் MMES விழா மண்டபம் அண்ணா சாலை, வாலாஜா CM மஹால் டி இராமசாமி தெரு, தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியம் பஞ்சாயத் அலுவலகம் கட்டிடம், ஆற்காடு சமுதாயக்கூடம் புதிய தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டு எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் வகையில், ஷேர் செய்யுங்கள்!
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் அடிப்படையில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சித்தோடு சாணார்பாளையத்தை சேர்ந்த சூர்யா (25) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025- 2026ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பத்திற்கான காலம் 22.08.2025 வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயிற்சியில் சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் 25.08.2005 ஆகும். மேலும் விபரங்களுக்கு 0451-4056597 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.