India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் காலியாக உள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளார். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.7) மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க…
விருத்தாசலம் அடுத்த கோவிலானூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் முருகன்குடி வி.ஏ.ஓ.வாக உள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று (ஆக.06) பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு, நெசவாளர்களுக்கான மத்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில் அவருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
ராமநாதபுரம் மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த <
(தாலுகா வாரியாக)
▶️வேப்பந்தட்டை – 03
▶️பெரம்பலூர் – 06
▶️குன்னம் – 06
▶️ஆலத்தூர் – 06 SHARE IT NOW !!
எழும்பூர், மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, கொத்தவால்சாவடி, தண்டையார்பேட்டை, GA சாலை, TH சாலை, ரெய்னி மருத்துவமனை, பழைய வண்ணாரப்பேட்டை, நீலாங்கரை, அடையாறு, கஸ்தூரி பாய் நகர், வெட்டுவாங்கணி, கிண்டி, மடிப்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம், ஓட்டேரி, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும் (07.08.2025) நாளையும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.அதன்படி திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகால் தெருக்கள் மேலும் எங்கெல்லாம் மின்தடை என்பதை <
ராணிப்பேட்டை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை வேளாண்துறையினரால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2WDக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1,700; 4WDக்கு ரூபாய் 2200, செயின் வகை இயந்திரத்திற்கு ரூபாய் 2500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.