India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கி தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், நிர்வாக காரணங்கள், 09-02-2004 அன்று மீண்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. ஒகேனக்கல் மற்றும் தீர்த்த மலை ஆகியவை முக்கிய சுற்றுலா தலம். ஷேர்!
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றிட கூறி தமிழக அரசினை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட்.06) கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் அரசு கலைக் கல்லூரி நுழைவாயில் முன்பு கோஷமிட்டு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என்று கூறினார்கள்.
சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி.
▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
நாமக்கல் இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருவட்ட அளவிலான தடகள போட்டிகளை இன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி நாளை (ஆக 07) காலை 9.30 மணிக்கு கரூர் திமுக அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடைபெற உள்ளது. மேலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெற உள்ளதாக கரூர் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக இருந்த குட்டப்பள்ளியை சேர்ந்த ஆர். சிவகுமார் இன்று காலை 7 மணி அளவில் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவரது கட்சி பணி மற்றும் சமூக சேவைகள் குறித்து பலர் கூறி வருகின்றனர். மாவட்ட திமுகவினர் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு ஆகும். கடந்த சில வருடங்களாக இதன் எண்ணிக்கை அருகி வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அரசாங்கத்தின் முயற்சியால் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது. 14 வனக்கோட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1303 வரையாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள், கடந்த மாதம் 13-ம் தேதி எல்லை தாண்டியதாகக் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (06.08.2025) மூன்றாவது முறையாக இலங்கை, ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் சிறைக்காவலை ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் 11ஆவது தேசிய கைத்தறி தினம் மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை(ஆக.7) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வனவாசி இரங்கண்ணன் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்: வத்தலகுண்டு, சித்தரேவுவில் பீரோவில் புத்தகம் எடுக்க முயன்ற 11 வயது நந்தனாதேவி, தவறி கயிற்றில் விழுந்ததால் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.