India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அந்தியூர் நகர், புதுப்பாளையம் அந்தியூர் குருநாதசுவாமி திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் வன பூஜைக்காக புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து தேர் புறப்பட்டு வன கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் தோலில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். மேலும் மதியமும், இரவு 8 மணியளவிலும் முதல் வனபூஜை சிறப்பாக நடைபெற உள்ளது.
▶️ஆமத்தூர்
▶️மாரனேரி
▶️எம்.புதுப்பட்டி
▶️மல்லாங்கிணர்
▶️பந்தல்குடி
▶️கீழராஜகுலராமன்
▶️சாத்தூர் தாலுகா
▶️அம்மாபட்டி – அப்பைநாயக்கன்பட்டி இணைப்பு
▶️ஏழாயிரம்பண்ணை
▶️ஆலங்குளம்
▶️மம்சாபுரம் – வன்னியம்பட்டி
▶️ஸ்ரீவி டவுன்- தலுகா
▶️நத்தம்பட்டி – கூமாபட்டி
▶️எம்.ரெட்டியாபட்டி – பரளச்சி
▶️நரிக்குடி – ஏ.முக்குளம்
▶️வீரசோழன் – கட்டனூர்
பழனி பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளீஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் நில பிரச்சினை காரணமாக நிர்மல்குமார், விவசாயி காளீஸ்வரன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கிடுகு கூரை மீது தீ வைத்தது தொடர்பாக மாவட்ட S.P.உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிர்மல்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
விராலிமலை வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை நாற்று மூலம் நடவு பயிராக சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.7,750 மானியம் வழங்கப்பட உள்ளதாக விராலிமலை உதவி வேளாண் இயக்குனர் பா.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக முகையூரில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிடார் பகுதியில் 43 மி.மீ., விழுப்புரம் 38 மி.மீ., அரசூர் 37 மி.மீ., மரக்காணம் 30 மி.மீ., வல்லம் 25 மி.மீ., வானூர் 15 மி.மீ., திண்டிவனம் 14 மி.மீ. மற்றும் செஞ்சியில் 10 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சங்கநேரியில் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற பிரபுதாஸ் (27), என்ற பட்டியலின வாலிபர் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நண்பர் காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
சீர்காழி அருகே புங்கனூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(28), ஆனந்த்(38) ஆகிய இருவரும் இன்று காலை புங்கனூர் ரயில்வே கேட் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலை ஓர சுவற்றில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு காற்று படிப்படியாக வலுப்பெறும் காரணத்தினால் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் மற்றும் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.