Tamilnadu

News August 6, 2025

ஆறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆக.6)நடைபெறுகிறது. கள்ளக் கோட்டை தனியார் மஹால், அறந்தாங்கி தனியார் மஹால், கீரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே, மாஞ்சான் விடுதி தனியார் மஹால், ஜெகதாபட்டினம் தனியார் மஹால், மீமிசல் சமுதாய கூடத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 16 கிலோ குட்கா

image

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்கு வங்கம் – திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(ஆக.6) காலை திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனையில், பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

News August 6, 2025

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

News August 6, 2025

சேலம்: கணவர் முன்னே மனைவி பலி

image

சேலம்: காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், (45). இவரது மனைவி வனிதா(45). இருவரும் நேற்று(ஆக.5) இரவு டூவீலரில் குப்பூர் அருகே காயாடைம்பட்டி நோக்கி சென்று கொடிருந்தனர்ண். சேலத்தில் இருந்து வந்த லாரி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வனிதா பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 6, 2025

திருச்சியில் தாழ்தள பேருந்துகள் விரைவில் அறிமுகம்

image

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, சேலம், நெல்லை மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மண்டலத்துக்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று பெற்றவுடன் இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

சென்னையில் செஸ்தொடர் ஒத்திவைப்பு

image

சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News August 6, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேரின் குண்டர் சட்டம் ரத்து

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நாகேந்திரன் உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைதான 27 பேரில் 17 பேர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 6, 2025

திருச்சி: விரைவில் வீடு தேடி வரவிருக்கும் ரேஷன் பொருட்கள்

image

தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சில மாவட்டங்களில் சோதனை ஓட்டமாக நடத்தப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 70,566 கார்டுதாரர்களுக்கு, 800 வாகனங்கள் மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 6, 2025

இந்தியன் வங்கி சூப்பர் அறிவிப்பு 2/2

image

இந்தியன் வங்கியின் அப்பரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 6, 2025

ராம்நாடு: EXAM இல்லாமல் GOVT வேலை.. APPLY பண்ணுங்க!

image

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <>CLICK<<>> செய்து விண்ணப்பியுங்க.. குறிப்பு: தேர்வு இல்லாமல் நல்ல சம்பளத்தில் அரசு வேலை… அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!