Tamilnadu

News November 19, 2024

30 இடங்களில் கண் பரிசோதனை முகாம்

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், விஷன் ஸ்பிரிங் இணைந்து நாளை (நவ.20) இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் வசிக்கும் 30 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 19, 2024

அரியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 சிறுவர்கள்

image

திருச்சி அரியமங்கலம் போலீசார் நேற்று ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர், அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சிறுவர்களை கைது செய்தனர். பின்னர், 2 சிறுவர்களையும் இன்று ஜாமீனில் விடுவித்தனர்.

News November 19, 2024

ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

கூட்டுறவுத்துறை சார்பில், 71 ஆவது கூட்டுறவு வார விழா இன்று(நவ.19) ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் பங்கேற்றனர்.

News November 19, 2024

தேனியில் 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் –  ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் நவ.1 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தற்போது 130 கிராம ஊராட்சிகளில் வருகின்ற நவ.23ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

 Gpay வில் லட்சம் பெற்ற VAO பணிநீக்கம் – ஆட்சியர் உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர் கிராமத்தைச்சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணிடம் வீட்டுக்கு பட்டா வாங்கி தருவதாக அந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் வி.ஏ.ஓ ராக்கு என்பவர் ரூ.3000 Gpay வாங்கிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 19, 2024

ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு

image

சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.

News November 19, 2024

வேடசந்தூர் குடகனாறு அணை திறப்பு

image

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரி குடகனாறு அணையின் நீர்வரத்து முழு கொள்ளளவு அடைந்த நிலையில் இன்று விவசாயிகள் பயன்பாட்டிற்காக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் தண்ணீரை திறந்து வைத்து மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றார். இந்நிகழ்வில் ஒன்றிய & பேரூர் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் (ம) பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

இந்திய ராணுவத்துக்கு அதிக வீரர்களை அனுப்புவதில் வேலூர் மாவட்டம் 2-ம் இடம்

image

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வேலூரில் நேற்று நடந்தது. இதில் பேசிய கலெக்டர் சுப்புலட்சுமி இந்தியாவில் அதிகளவு ராணுவ வீரர்களை அனுப்பும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் ஏதேனும் இருப்பின் அதனை கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

News November 19, 2024

விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ஹரிகிருஷ்ணன், எஸ்.வேல்மாறன், ஏ.நாகராஜன், ஆர்.தாண்டவராயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 53 மனுக்கள் பெறப்பட்டன

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 53 கோரிக்கை மனுக்கள் மக்கள் அளித்தனர். அதை பெற்ற மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.