India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று ஆகஸ்ட் 5 ,11ஆவது தேசிய கைத்தறி தின விழா ஆகஸ்ட் 7 அன்று குருவராஜன் பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கொண்டாடப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ யு சந்திரகலா அறிவித்துள்ளார். அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நெசவாளர் சங்கத்தினரும் அந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட டாஸ்மார்க் குடோனில், சமீப காலமாக மது பாட்டில்கள் மாயமானதாக எழுந்த புகாரில் அடிப்படையில் இன்று சென்னை அதிகாரி குழுக்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையை விட 27 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகையை அரசுக்கு, மாவட்ட அதிகாரிகள் அபராதமாக செலுத்த வேண்டும் என ஆய்வு குழுவினர் உத்தரவிட்டனர்.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நீலகிரியில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் ஊராட்சி கொலக்கம்பை பகுதி மக்களுக்கு சிஎஸ்ஐ பள்ளி மைதானத்திலும், நெடுங்குளா பகுதி மக்களுக்கு மிலிதேன் ஊராட்சி சமுதாய கூடத்திலும், பாலகொல பகுதி மக்களுக்கு தேணாடு சமுதாய கூட்டத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (5.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை ஒட்டி இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு மலை ரயிலில் மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்படும், ரயில்9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், ‘யாராவது வாகனம் வாங்கும் போது ஆன்லைனில் முன்பணம் கட்டினால் தான் வாகனம் தருவோம் என கூறினால் அதை நம்பி பணம் கட்டி ஏமாற வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.,5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.