Tamilnadu

News July 10, 2025

சேலம்: 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கம்

image

சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் இயங்கும் கோவை – மன்னார்குடி செம்மொழி – கோவை தினசரி எக்ஸ்பிரஸ் (16616/16615), கோவை – திருப்பதி – கோவை எக்ஸ்பிரஸ் (22616/22615), கோவை – நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (22668/22667), கோவை – ராமேஸ்வரம் – கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் (16618/16617) ஆகிய 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 10, 2025

சேலம் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்

image

சேலத்தில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், எந்தெந்த இடங்களில் நடைபெறும் எனும் அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரமங்கலம், எருமாபாளையம், எடப்பாடி, அயோத்தியாபட்டினம், திருமலகிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

இரவு ரோந்து பணி செல்லும் போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம், தக்கோலம், திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்.

News July 10, 2025

திருச்சி மாநகர காவல் இரவு பணி விவரங்கள்

image

திருச்சி மாநகர காவல் (10.07.2025) இரவு பணி, கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையராக யாஷ்மின் பானு பணியாற்றுகிறார். முக்கிய காவல் நிலையங்களில் சிவபிரகாசம் (பொன்மலை), திருமதி. சரஸ்வதி (கே.கே.நகர்), திரு. கோசலைராமன் (ஸ்ரீரங்கம்), திருமதி. ரத்தத்தின் (காந்தி மார்க்கெட்), திரு. பாலகிருஷ்ணன் (பாலக்கரை), திரு. சண்முகவேல் (உறையூர்) ஆகியோர் காவல் ஆய்வாளர்களாக பணியில் உள்ளனர்.

News July 10, 2025

தேனி: டிகிரி போதும் – மேனேஜர் வேலை!

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Manager – Loan Approval)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 வழங்கபடுகிறது. டிகிரி படித்திருந்தால் போதும் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த<> லிங்கை<<>> க்ளிக் பண்ணி விண்ணப்பியுங்கள். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 10, 2025

நாமக்கல்லில் இரவு நேர ரோந்து காவலர் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 10) நாமக்கல் – யுவராஜன் (9498177803 ), ராசிபுரம் – சுகவானம் ( 9498174815), திருச்செங்கோடு – வளர்மதி ( 8825405987), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 10, 2025

சிவகங்கையில் நாளை மதுபான கடைகள் மூடல்

image

சிவகங்கை நகரில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் நாளை (ஜூலை.11) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு நாளை ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

நாமக்கல் லாரி பில்டிங் பற்றி தெரியுமா..?

image

நாமக்கல் மாவட்டம் என்றாலே முட்டை தான் முதலில் நியாபகத்திற்கு வரும். ஆனால், நாட்டிற்கு நாமக்கல் அளித்த மற்றொரு பங்கும் உண்டு. அது லாரிகள், டேங்கர்கள், டிரக்கள் என நாமக்கல்லில் இருந்து இந்தியா முழுவதும், ஏன் வெளிநாட்டிற்கும் கூட பல்லாயிரக் கணக்கில் தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தொழிலை பாரம்பர்யமாக செய்யும் பல குடும்பங்களையும் அங்கு காண முடியும்.( SHARE IT)

News July 10, 2025

பெருந்துறையில் முதியவர் தற்கொலை

image

பெருந்துறை, மேக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (77). இவர் கடந்த 8 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி, கடந்த ஒரு வாரமாக நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததால், மனமுடைந்து, வீட்டில் பூச்செடிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News July 10, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 10) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!