India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.05) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கபடுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <
கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் திருச்சியில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த, ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் காவல் நிலையம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம், வளநாடு, பெட்டவாய்த்தலை, கல்லக்குடி உள்ளிட்ட 8 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டது.
பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் வழக்கு இன்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 9 பேருக்கும் வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ளது திருக்கச்சி நம்பிகள் சமேத வரத ராஜ பெருமாள் கோயில். வைணவர்களில் முக்கியமான நபரான ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளுக்கு பெருமாள் மீது இருந்த பக்தி காரணமாக ஏழரை வருடங்கள் பிடிக்க வேண்டிய சனி ஏழரை நாழிகையில் விலகிச் சென்றது. சனி தோஷத்தை பக்தியால் வென்றவர் என்பதால், இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், தாரம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ரயில்கள் தற்போது மீண்டும் எழுப்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில், எழும்பூர்- புதுச்சேரி மெமு விரைவு ரயில்கள் மீண்டும் இன்று (ஆக.5) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த கட்டிடங்களில் உள்ள தேவாலயங்களை புதுப்பிப்பதற்கு அரசு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலான தேவாலயங்களுக்கு ரூ.10 லட்சம், 15 ஆண்டுகள் – ரூ.15 லட்சம் மற்றும் 20 ஆண்டுகள்- ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால், வைகை அணை நீர்மட்டம் 69 கனஅடியை எட்டியதால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் இயல்பை விட 78 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.