Tamilnadu

News August 8, 2025

திருச்சி: ஆதிதிராவிட, பழங்குடியினர்களுக்கான அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியை சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பொது நர்சிங் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

கராத்தே பயிற்சியாளருக்கு பாராட்டு

image

குடவாசல் ஒன்றியம் திருவீழிமிழலை சரகத்திற்கு உட்பட்ட கூந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் முதலிய பயிற்சிகளை மாணவ மாணவிகளுக்கு அளித்து வரும் தன்னார்வலர் ரவி பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தலைமை ஆசிரியை தேவி மற்றும் உதவி ஆசிரியை பயனாடை அணிவித்து பாராட்டினர்

News August 8, 2025

கள்ளக்குறிச்சி: குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் 09.08.2025 அன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்ற அனைத்து விதமான சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த குடும்ப அட்டை சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 8, 2025

நெடுஞ்சாலைத் துறைபணிகள் குறித்த ஆய்வு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும்
பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2025) நடைபெற்றது.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலைகள்) ராஜகுமார் உள்ளார்.

News August 8, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆய்வு

image

நாகப்பட்டினம் அருகே நரிமணத்தில் இன்று நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நரிமணம் உத்தமசோழபுரம், கோபு ராஜபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் ஆகியோர் முகாமை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

News August 8, 2025

குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

image

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. இருப்பினும் அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குற்றாலம் பகுதிகளுக்கு வருகை புரிந்து குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

News August 8, 2025

சீர்காழியில் மாணவர்களுக்கான மேடைப் பேச்சு பயிற்சி முகாம்

image

மாணவ பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஜே.சி.ஐ சீர்காழி கிரீன் சிட்டி சார்பில் மேடைப்பேச்சு பயிற்சி முகாம் நாளை சனிக்கிழமை சீர்காழி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. சிறந்த பேச்சுத் திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

ராணிப்பேட்டையில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க!

News August 8, 2025

சிவகங்கையில் 39 சிறப்பு முகாம்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாரத்திற்கு வீடுதோறும் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் குறித்த தகவலுக்கு 104 இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முகாம்களைப் பயன்படுத்தி, “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் நலன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

News August 8, 2025

நெல்லை: சுதந்திர தின சிறப்பு ரயில் – முன்பதிவு தொடக்கம்

image

நெல்லை ரயில் பயணிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. இதில் வண்டி எண் 06089, 06090 ஆகிய ரயில்கள் நெல்லை வழியாக வந்து செல்கின்றது. இதற்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!