India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.
கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்து இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (17.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் அமைந்துள்ளது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதேஸ்வரர் கோயில். அங்கம் பிளவு பட்டு இருப்பதால் அவர்களை அங்க நாதேஸ்வரர் என்ற பெயர் சொல்லி அழைக்கின்றனர்.இந்த கோயிலில் அம்மன் சுபத்ரா ஜனனி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்,இதனால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம்நடைபெறும் சிறப்பும் உள்ளது. திருமண தடையுள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை & விருப்பாச்சி தாழையூத்து அருவியை சுற்றுலா தளமாக்க ₹8,22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் இத்திட்டம் 2023 ல் ஒதுக்கப்பட்ட நிதி ஆனால் இன்னும் சுற்றுலாத்தலமாக இந்த அணைகள் நிறைவேற்றப்படுமா? பாடாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் தாழையூத்து அருவி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. இதில் தடகளம், வாலிபால், டேக்வாண்டோ, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுக்களில் பயிற்சி நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
தருமபுரி மாவட்டத்தில் சிறுகனிம குத்தகைகளுக்கான நடைச்சீட்டுகளை வருகின்ற 21.04.2025 முதல் இணையவழியில் குத்தகைதாரர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ளலாம். மேலும் நடைச்சீட்டுகளை அச்சடிக்கத் தேவையானப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஏ4 தாள்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரக அலுவலகத்தில் இருந்து அஞ்சல் மூலமாக குத்தகைதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்நாளில் ஸ்ரீ முஷ்ணம் பூவராகவரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..
Sorry, no posts matched your criteria.