India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கோரிமேடு அரசு ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை பழங்குடியினர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்களில் 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஆக.31- ஆம் தேதி கடைசி நாளாகும். மாதந்தோறும் ரூபாய் 750 உதவித்தொகை, காலணி, சைக்கிள், சீருடை, வரைப்படக் கருவி, பேருந்து பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக ‘உயர்வுக்கு படி’ முகாம் இன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் உயிர்கல்வியில் சேரவும், எளிதாக கல்வி கடன் வழி வகை செய்து தரப்படும். எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர அறிக்கை அசல் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 12,342 விவசாயிகளுக்கு ரூபாய் 67.46 கோடி கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடனாக கறவை மாடு ஒன்று பராமரிக்க ரூபாய் 14,000-ம், அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூபாய் 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது, எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
தென்காசி மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் லிங்கில் <
செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <
ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.