India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரபட்டி பொன்னகரத்தை சேர்ந்தவர் முத்துமாரி (49). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், நேற்று தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள பனை மரத்தின் ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் இடறி வீட்டின் கீழே இருந்த கழிவறையில் விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ராமநத்தம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவர் தன் வீட்டில் வைத்திருந்த 9 1/4 பவுன் தங்க நகையை காணவில்லை என ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சித்ராவின் வீட்டில் வாடகைக்கு இருந்த பவுனாம்பாள் (46), அவரது மகள் ஸ்வேதா (24) ஆகியோர் பீரோவை திறந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

அரோவில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல், 21 வரை ஒரு வார காலத்திற்கு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கு நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டது.

புதுகை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை, பொன்னகுளம், மேலத்தானியம், நகரபட்டி, கொன்னையூர், குளத்தூர், பாக்குடி, இலுப்பூர் மற்றும் மாத்தூர் துணைமின் நிலையங்களில் இன்று( டிச. 9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர்: நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(26). இவருக்கு ஜெயஸ்ரீ எனும் மனைவி உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறால் கோபித்துகொண்டு உறவினர் வீட்டிற்கு சென்ற பிரசாந்த், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டாரா..? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதாரம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் டிச.20ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 63803-69124 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகளுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. https://umis.tn.gov.in/ இந்த இணைதளத்தில் இந்தாண்டுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நாளை(டிச.11) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.

வைரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது 16 வயது மகள் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆறு மாதமாக வயிற்று வலி இருந்து வந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த ஜன்னல் கம்பியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.