India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. பை பாஸ் சாலையில் நடந்த முகாமிற்கு, விருதுநகர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார். சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நவ.20 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் மாலை 4.30 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் முகாமில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (நவ.19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் நவ.20ஆம் தேதி சென்னை எழும்பூர் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (20681) இரவு 8.55 மணிக்கும், 21ஆம் தேதி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (12667) இரவு 7.30 மணிக்கும், 23ஆம் தேதி சென்னை எழும்பூர் – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (22663) பகல் 2.50 மணிக்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. குழந்தைகள் தினத்தன்று(நவ.14) சிறந்த பள்ளிக்கான கேடயம், பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கரங்களில் விருதினை வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று(நவ.19) வாழ்த்து பெற்றனர்.
சென்னையில் கலைவாணர் அரங்கில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கோடைகாலத்தை எதிர்கொள்ளும் விதமாக, சென்னை மண்டலத்தில் மாதவரம் ரேடியன்ஸ், மகாகவி பாரதியார் நகர், பருத்திப்பட்டு, சதர்ன் அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டக்கன்னியம்மன் கோவில், டேவிட்சன் தெரு, கணேஷ் நகர் ஆகிய 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பீட்டில் 33/11 கிலோ வோலட் துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 20-ம் தேதி) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.
Sorry, no posts matched your criteria.