Tamilnadu

News April 22, 2025

ஈரோடு: நீரில் மூழ்கி சிறுவன் பலி!

image

கோவை, காரமடை தாயனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தனது 3 வயது பேரனுடன் நேற்று, ஈரோடு, புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கலியுக சித்தர் பீடத்திற்கு வந்துள்ளார். பேரனுடன், சித்தர் பீடத்தில் உள்ள சிலைகளுக்கு முன்பு அமர்ந்திருந்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், 4 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 22, 2025

திருப்பத்தூர் அருகே வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

image

திருப்பத்தூரை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில், அவருக்கு நீதிபதி 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News April 22, 2025

திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது வழக்கு

image

திருநாவலூரை சேர்ந்த ராஜா, கெளசல்யா இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர். ஜாதகம் சரியில்லை என்பதால் ராஜா கெளசல்யாவிடம் பேசுவதை நிறுத்தினார். இதனால் மனவேதனையில் ஏப்ரல் 19-ம் தேதி ராஜாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அதிகமாத்திரையை உட்கொண்ட கெளசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் நேற்று, ராஜா மற்றும் அவரது தாய் உஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News April 22, 2025

சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

image

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

News April 22, 2025

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி கலெக்டர் அழைப்பு

image

பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப் பயிற்சி வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. தகுதியானவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார்.

News April 22, 2025

ஆட்டோ ‘சைடு மிரர்’ உடைந்து கழுத்தை கிழித்ததில் பெண் பலி

image

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் 36. நேற்று மாலை ஷேர் ஆட்டோவில் மகபூப்பாளையம் பகுதியில் செல்லும் போது அவர் வந்த ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதி விபத்தானது. அதில் ஆட்டோவின் ‘சைடு மிரர்’ உடைந்து, அதைச் சுற்றி இருந்த தகடு ‘கட்’ ஆகி, ஆட்டோவில் இருந்த மாரியம்மாள் கழுத்தை கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் பயணம் செய்வோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்க.

News April 22, 2025

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே பலி

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்போஸ் என்ற விவசாயி தனது டிராக்டரில் திருப்புவனம் சென்றுவிட்டு தனது கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கால்வாய் அருகே எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 22, 2025

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 314 கிலோ பீடி இலைகள்

image

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு இடையிலான ஆமை முட்டைகள் பொரிப்பகம் அருகே கடற்கரையோரம் சாக்கு மூட்டைகள் இருப்பதைக் கண்ட கடற்கரை பாதுகாப்பு குழும போலீசார், அதனை சோதித்த போது, அதில் 314 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. பின்னர், அவை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 22, 2025

குவாரி நீரில் மூழ்கிய டிரைவரை தேடும் பணி தீவிரம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(39) டிரைவர். தனது நண்பர்களான இசக்கிமுத்து, கோவிந்தராஜன், மாரிமுத்து, பொன்ராஜ் ஆகியோருடன் பந்தப்பாறை பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் தேங்கியுள்ள மழை நீரில் குளிக்கச் சென்றார். குவாரியில் குளித்த ஈஸ்வரன் திடீரென நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஈஸ்வரனை இரவு பகலாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 22, 2025

வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத உடல்

image

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள மோரி வாய்க்காலில் நேற்று இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து அவர் யார், எப்படி என்பதை பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!