India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில், நேற்று (ஏப்ரல் 21) 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூரில் 103.1 டிகிரியும், வேலூர் மாவட்டத்தில் 101.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருவதால், வேலூர் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர், குளிர்பானங்களை அதிகம் குடியுங்கள். முடிந்தளவுக்கு மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்திடுங்கள்.
தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடனடி லோன் மேளா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு திட்டம் சார்ந்த கடன் மற்றும் விவசாயம் சார்ந்த லோன் மேளா சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு உடனடியாக கடன் வழங்கப்படும். தென்காசியில் வருகின்ற (28-4-2025) அன்று குத்துக்கல் வலசை S.R மஹாலில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. பணம் தேவைபடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில், சேலத்தைச் சேர்ந்த ஷீலாராணி என்ற மாணவி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், அண்மையில் ஆன்லைன் மூலமாக சயனைடு வேதிப்பொருளை வாங்கி உணவில் கலந்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே அவர் மயக்கமானதால், சக மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே, ரயில் மோதி, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார் என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்ராஜ் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. சீசிங் ராஜாவின் கூட்டாளியான இவர் போலீசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என பயந்து சில மாதங்களுக்கு முன் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் ஜாமினில் வந்த இவர் சேலையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார்.
நீலகிரி, மசினகுடியைச் சேர்ந்த சரசு என்பவர், அஞ்சலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரை நேற்று, உதகை, சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொக்காபுரம் சாலையில், காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரசு உயிரிழந்தார். இவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இவரது இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருஷநாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் 2023ல் திருமணம் முடிந்தது.தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார். அவர் அளித்த புகாரில் சிறுமியின கணவர், அவரது தந்தை, தாய், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ராசிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 66) இவரது மனைவி பூங்கோதை (62). இருவரும் நேற்று டூவீலரில் மல்லசமுத்திரம் அருகே மொரங்கம் காட்டூர் பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது டெம்போ மோதியது. இதில் பூங்கோதை (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் ராமச்சந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40) என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, காரமடை தாயனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர், தனது 3 வயது பேரனுடன் நேற்று, ஈரோடு, புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் கலியுக சித்தர் பீடத்திற்கு வந்துள்ளார். பேரனுடன், சித்தர் பீடத்தில் உள்ள சிலைகளுக்கு முன்பு அமர்ந்திருந்த போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், 4 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.