Tamilnadu

News August 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

News August 22, 2025

கடலூரில் கொள்ளையர்கள் கைவரிசை

image

கடலூர் அருகே சேடப்பாளையத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (36). சமையல் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று இரவு தன் வீட்டின் கதவுகளை திறந்து வைத்து விட்டு வெளியே படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சாமர்த்தியமாக வீட்டில் புகுந்து, அங்கிருந்த 2½ பவுன் தங்கம், வெள்ளி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 22, 2025

மதுரை: சுகாதார துறையில் வேலை..இன்றே கடைசி

image

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இன்று 22ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை <>இங்கே கிளிக் செய்து<<>> அதில் கொடுக்கப்பட்ட முகவரியில் நேரிலோ தபால் முலம் அனுப்ப வேண்டும். டிப்ளமோ முதல் டிகிரி M.Sc, MCA, படித்தவர்களுக்கு தகுதிகேற்ப ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 22, 2025

காஞ்சிபுரத்தில் 10th, 12th முடித்தாலே வேலை

image

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஆக.23) நடக்கிறது. இதில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 22, 2025

புதுவை: 14 போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்!

image

▶️சுபம் சுந்தர் கோஷ்-காரைக்கால் சட்டம் ஒழுங்கு தெற்கு
▶️பக்தவச்சலன்-புதுவை போக்குவரத்து தெற்கு-மேற்கு
▶️செல்வம்-புதுவை சட்டம் ஒழுங்கு தெற்கு
▶️மோகன்குமார்-காவல்துறை தலைமையகம்
▶️ரச்சனா சிங்-போக்குவரத்து வடக்கு – கிழக்கு
▶️முருகையன்-காரைக்கால் சட்டம்-ஒழுங்கு வடக்கு
▶️சுப்ரமணியன்-புதுச்சேரி சட்டம் ஒழுங்கு-மேற்கு ( <<17479595>>பகுதி-2<<>>)

News August 22, 2025

புதுவை: 14 சூப்பிரண்டுகள் இடமாற்றம்! (2/2)

image

▶️பழனிவேலு-புதுவை சி.பி.சி.ஐ.டி
▶️நல்லம் கிருஷ்ண ராய பாபு-புதுவை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கடலோர காவல்படை
▶️ரகுநாயகம்-புதுவை சட்டம் ஒழுங்கு வடக்கு
▶️வம்சீதர ரெட்டி-புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு அதிகாரி
▶️சரவணன்-போலீஸ் ஆப் போலீஸ்
▶️ஜிந்தா கோதண்டராம்-கமாண்டண்ட் ஆயுதப்படை மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு
▶️வரதராஜன்-ஏனாம் ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

குமரியில் 18 பகுதியில் முகாம்கள்..!

image

உழவரைத்தேடி வேளாண்மை முகாம் இன்று(ஆக.22) சுசீந்திரம், பறக்கை, நாவல்காடு, நுள்ளிவிளை, வெள்ளிமலை, கண்ணனூர், பளுகல், இனயம்புத்தன்துறை, அதங்கோடு, அகஸ்தீஸ்வரம், தர்மபுரம் தெற்கு, தோவாளை, குமாரபுரம், நெய்யூர், குலசேகரம், அண்டுகோடு, கிள்ளியூர், குளப்புரம் ஆகிய 18 கிராமங்களில் நடக்கவுள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு குறைகள் & கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் அறிவிப்பு.

News August 22, 2025

ஈரோட்டில் அரசு வேலை கனவா? இங்கே போங்க!

image

டி.என்.டி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ போட்டி தேர்வுகளுக்கான மண்டல அளவில் இலவச முழு தேர்வு வரும், 23, 30, செப்., 6, 13, 20 ஆகிய நாட்களில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்க உள்ளது. இதில் தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும் பயிற்சியுடன், முழு மாதிரி தேர்வு, மென் பாடக்குறிப்பு வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.( ஷேர் பண்ணுங்க)

News August 22, 2025

தூத்துக்குடி: அதிகாரிகளை விளாசிய கலெக்டர்

image

தூத்துக்குடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வில்லிசேரி விவசாயி பிரேம்குமார் உளுந்துக்கான கொள்முதல் பணம் 4 மாதமாக வழங்கப்படவில்லை என முறையிட்டார். கலெக்டர் இளம்பகவத், அவர்களுக்கு 4 மாதமாக பணம் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது; உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேலை?, ஒரு மாத ஊதியம் வழங்காவிட்டால் பொறுப்பீர்களா? உடனே சென்னை சென்று, பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பின் தான் இங்கே வர வேண்டும் என உத்தரவிட்டார்.

News August 22, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண் 139) நடைபெறவுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு 9499056944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!