Tamilnadu

News September 7, 2025

தங்கத்தின் விலை சேலத்தில் 2 நாளில் ரூ.1,240 உயர்வு!

image

சேலத்தில் கடந்த செப்.04-ல் தங்கம் கிராம் ரூ.9,795 ஆகவும், செப்.05-ல் ரூ.9,865 ஆகவும், செப்.06- ல் ரூ.9,950 ஆகவும் உயர்ந்து விற்பனையானது. இதன்படி கடந்த இரு நாட்களில் மட்டும் சேலத்தில் தங்கம் கிராமுக்கு ரூபாய் 155, சவரனுக்கு ரூபாய் 1,240 விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட விழாக்காலங்கள் என்பதால் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்ப்பு!

News September 7, 2025

பேர்ணாம்பட்டு: புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு

image

பேர்ணாம்பட்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான முதல் கட்டமாக, பேருந்து நிலையம் அமைக்க தேவையான பரப்பளவுள்ள இடம் அதிகாரிகள் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர்.தற்போதைய நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகளுக்கான வசதிகள் மேம்படும் .

News September 7, 2025

திருச்சி – டெல்லி விமான சேவை அறிமுகம்

image

இண்டிகோ நிறுவனம் திருச்சி – டில்லி தினசரி சேவையை வரும் 16ஆம் தேதி முதல் வழங்க உள்ளது. திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9:15 மணிக்கு டில்லியை அடையும். மறு வழித்தடத்தில் டெல்லியில் இருந்து பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:45 திருச்சி வந்தடையும். இந்த சேவையில் 180 இருக்கைகள் கொண்ட ஏர் பஸ் விமானம் இயக்கப்பட இருப்பதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. SHARE

News September 7, 2025

ஆத்தூர் அருகே அண்ணனை கொலை செய்த தம்பி!

image

சேலம் மாவட்டம ஆத்தூர் அருகே நேரு நகர் பகுதியில் அண்ணன் சூர்யா (27) என்பவரை தம்பி சிவசுதன் (21) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்து சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு. இச்சம்பவம் குறித்து ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் விசாரணை மேலும் ஆத்தூர் டி.எஸ்.பி.,அலுவலகம் பின்புறம் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 7, 2025

வாணியம்பாடி அருகே மரக்கடையில் தீ விபத்து

image

வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீ பரவாமல் தடுக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது, தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2025

சிவகங்கையில் காவலர் தின வீரவணக்கம்

image

சிவகங்கை: செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்தார். அதன்படி செப்டம்பர் 6, நேற்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

News September 7, 2025

விழுப்புரம் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

image

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சரியாகச் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கிகள் கடனுதவி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென அறிவுறுத்தினார்.

News September 7, 2025

அரசு தேர்வில் வெல்ல வேண்டுமா? இத பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இங்கு வரும் செப்.9, 13, மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 04172- 291400 எண்ணை அழைத்து தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 7, 2025

புதிய ஆழ்துளை கிணறு அடிக்கல் நாட்டு விழா

image

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். உடன் ஊராட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

News September 7, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம், கரூரை சுற்றியுள்ள பகுதியில் வருகின்ற (10.09.2025 ) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகம் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி வட்டங்களில் நடைபெறுகிறது. 13 துறைகள் 43 சேவைகள் உள்ளடக்கம். மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், ஜாதி சான்று, ஆதார் கார்டு திருத்தம் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர்.

error: Content is protected !!