India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக நடப்பாண்டில் வாழப்பாடி, கருப்பூர், ஜலகண்டாபுரம் உள்பட தமிழகத்தில் 20 பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைகிறது.
மதுரை காவல் சரகத்தின் டிஐஜி பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜி யாக நியமனம் செய்து உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பத்து டிஐஜிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோவை, மதுரை, திருச்சியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சேலத்திலும் மெட்ரோ ரயில் விடுவது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பெருநகரில் 170 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளதால், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து நகரங்களிலும் நாய் கருத்தடை மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள கிராமமான முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் வழியிலேயே அமைந்துள்ள கோவில் தத்தகிரி முருகன் கோவில். இந்த கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஷேர் செய்யவும்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மார்ச் 26) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது94990 55943, 0424-2275860 என்ற எண்களை தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை காவல் சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி ராமநாதபுரம் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
புதுகை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச்.26) காலை 10 மணிக்கு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் CEMONC கூட்ட அறையில் நடைபெற உள்ளது. இதில் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், விதவைகள், படை வீரர்களை சான்றோர், மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.