India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு தினமும் காலை 6 மணிக்கு இயக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில் (56108) மார்ச்.25, 29, 30 ஆகிய நாட்களில் திருப்பத்தூர் வரை இயக்கப்படும். இதேபோல் ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில் (56107) அதே நாட்களில் திருப்பத்தூரில் இருந்து புறப்படும் என்றும், திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத் துறைகள் சார்பில் கண்காட்சி நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 26) புதன்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எரிவாயு பயன்படுத்துவோர் சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என அறிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாடு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சரியப்பட்ட அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது. கொங்குநாட்டு மக்களே ஷேர் பண்ணுங்க
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக SI வீடியோ வெளியிட்ட நிலையில் இந்த வழக்கை மனித உரிமை ஆனையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க மாநில் டிஜிபி மற்றும் நெல்லை ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விரல் ரேகையை அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்வது அவசியம் என்றும், இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்திருக்கிறார். தெரிந்தவர்கள் பயனடைய உடனே அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்..
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.