Tamilnadu

News March 24, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 24.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். இரவு நேரத்தில் வெளியே செல்லும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

News March 24, 2025

நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகு இப்பணிகளை மேற்பார்வை செய்வார்.

News March 24, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – மனோகரன் (9952376488) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 24, 2025

விழுப்புரம்:  ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

image

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.

News March 24, 2025

விழுப்புரம்: உயிரிழந்த சிறுமிக்கு முதலமைச்சர் நிதியுதவி

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் 10 வயது மகள் காயத்ரி ஆடு மேய்டு கொண்டு இருந்த போது பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் தலையில் விழந்ததில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் மூன்று லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

News March 24, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 24.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 24, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரசு பஸ் பாஸ் இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே பயன்படுத்தி வரும் 31-03-2025 வரை செல்லத்தக்க பாஸ்களை 30-06-2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துமாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம். நாளை மறுநாள் நடைபெறவிருந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பில் தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு  கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று (24.03.2025) வழங்கினார்.

News March 24, 2025

நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்

News March 24, 2025

நீலகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு , வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி அதிகாரிகள் உள்ளனர்.

error: Content is protected !!