India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும். *இரவு வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்து உதவுங்கள்*
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை எஸ்.பி அலுவலகம் வெளியிட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பகிரவும்*
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 24, திங்கள்கிழமை) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும்.
நெல்லை மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் இன்று [மார்ச்.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அவசர உதவிக்கு 100யையும் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.03.2025) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அறிவித்துள்ளது ஆகவே பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரமும் அழைக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று தனது முகநூல் பக்கத்தில், “தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் கற்றுக் கொடுக்க நிரந்தர ஆசிரியர்கள் 0, ஹிந்திக்கு 86, சமஸ்கிருதத்துக்கு 65 பேர் உள்ளனர் என மத்திய அரசு கூறுகிறது. இப்படி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதை தான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது” என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 416 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே இன்று(மார்ச்.24) தடை செய்யப்பட்ட பகுதியில் நீந்திய அமெரிக்க நாட்டு சுற்றுலா பயணியை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் சுற்றுலா பயணியின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் செயல்படுகின்றனர் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வருகின்ற மார்ச் 26 அன்று காலை 9 மணி முதல் மார்ச் 27 அன்று காலை 9 மணி வரை தமிழக அரசின் திட்டமான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் முகாம் நடைபெறும் எனவும் இதனை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
Sorry, no posts matched your criteria.