India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (எச்.சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், புராஜக்ட் ஆபிசர் உள்ளிட்ட 24 இடங்கள் உள்ளன. 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார்ச். 24) <
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (எச்.சி.எஸ்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், புராஜக்ட் ஆபிசர் உள்ளிட்ட 24 இடங்கள் உள்ளன. 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார்ச். 24) <
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(58) என்பவர் வீட்டின் தகர கூரையில் கால் வைத்தபோது கீழே விழுந்து, தலையில் அடிபட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்ற மூளைச்சாவு அடைந்ததால் உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் நேற்று(மாரச் 23) இரவு தானம் பெறப்பட்டன. இன்று அரசு சார்பில் இறுதி மரியாதை செய்து அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 24) நீர்மட்டம்: வைகை அணை: 58.40 (71) அடி, வரத்து: 112 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.05 (142) அடி, வரத்து: 108 க.அடி, திறப்பு: 300 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 68.06 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 34 (52.55) அடி, வரத்து: 2 க.அடி, திறப்பு: இல்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 கோயில்கள்:
*வாலீஸ்வரர் கோயில் (வாலிகண்டபுரம்)
*ஏகாம்பரேஸ்வரர் கோயில் (செட்டிகுளம்)
*குற்றம் பொருந்தவர் கோயில் (எஸ். ஆடுதுறை)
*செட்டிகுளம் பலதண்டாயுதபாணி கோயில்
*மதனகோபாலசுவாமி கோயில் (பெரம்பலூர்)
மதுரை ஈச்சனேரி பகுதியில் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்ற காவலர் மார்ச்18-ல் எரித்து கொல்லப்பட்டார். இதில் வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூவேந்தரை இன்று அதிகாலை கைது செய்ய முயன்ற போது ஆய்வாளர் மாரி கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூவேந்தர் பணத்திற்காக கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது. எனவே, வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் விவசாயிகள் அருகில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுகை சித்த மருத்துவமனை அலுவலகத்தில் உதவியாளர் டேட்டா அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு IT,B.Tech, BBA,BCA,BSC-IT ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.31க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை http://pudukkottai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
நாகர்கோவில் அருகே நேற்று முன்தினம்(மார்ச் 22) ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகளும் இதில் அடங்குவர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடிய ஏதாவது கலந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.