India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சனி பகவான் மற்ற கோவில்களில் தனி சந்நிதியிலோ நவக்கிரகங்களிலோ இருக்கும் போது சனி மூலவராக உள்ள கோவிலாக குச்சனூர் சனீஸ்வரர் கோவில் திகழ்கிறது.இங்கு சனி லிங்க வடிவில் காணப்படுகிறார். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபட்டால் சனி தோஷம் நீங்கி நன்மைகளை பெற முடியும்.சனி பகவானுக்கே ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.ஷேர் பண்ணுங்க
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.25 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் சூலக்கரை சென்று தான் செல்ல வேண்டும். SHARE IT
களம்பூரை அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி இவரது மனைவி கல்பனா, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக மனைவி தனது தாய் வீடான வேலூருக்கு சென்று விட்டார். இதனால் சிவக்குமார் மட்டும் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று சிவகுமார் ரத்தகாயங்களோடு உயிரிழந்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூர் போலிசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் செங்கை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.
வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ், இவர், நேற்று காலை ஆந்திர, வரதையாபாளையம் நீர்வீழ்ச்சிக்கு, காரில் 8 பேர் பயணித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெரியவேடு பகுதியில், முன்னாள் சென்ற லாரி ஒன்று குறுக்கிட்டதால், காரை இடதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவி சம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில், மார்ச்.26, 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி மக்களுக்கு SHARE பண்ணுங்க..
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மூன்று குடோன்களில் பிரபல நிறுவனங்களில் காலாவதியான சிமென்ட் கட்டிகளை கொண்டு வந்து, அதனை அரைத்து போலியான சிமெண்ட் தயாரித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆயிரம் மூட்டை சிமெண்ட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
செம்பனார்கோயில் கஞ்சா நகரம் பகுதியை சேர்ந்தவர் அகோர முருகன் (54) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது அங்கு அருந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செம்பனார்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.