India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ஈச்சனேரி பகுதியில் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்ற காவலர் மார்ச்18-ல் எரித்து கொல்லப்பட்டார். இதில் வில்லாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மூவேந்தரை இன்று அதிகாலை கைது செய்ய முயன்ற போது ஆய்வாளர் மாரி கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூவேந்தர் பணத்திற்காக கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது. எனவே, வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் விவசாயிகள் அருகில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுகை சித்த மருத்துவமனை அலுவலகத்தில் உதவியாளர் டேட்டா அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு IT,B.Tech, BBA,BCA,BSC-IT ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.31க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை http://pudukkottai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
நாகர்கோவில் அருகே நேற்று முன்தினம்(மார்ச் 22) ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகளும் இதில் அடங்குவர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடிய ஏதாவது கலந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…
நீலகிரி: மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம், விளையாட்டு பயிற்சி ஆகியவற்றில் தேர்ந்த பெண் பயிற்சியாளர்களா நீங்கள்..? உங்களுக்கான அரசாங்கத்தின் அரிய வாய்ப்பு. காலிப் பணியிடங்களின் விவரம்: தற்காப்பு கலை பயிற்சியாளர்(ரூ.9,000 சம்பளம்), விளையாட்டு பயிற்சியாளர்(ரூ.15,000 சம்பளம்). விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 26ஆம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று (மார்ச் 23) நடந்தது. இந்த பயிற்சி முகாமை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சத்திய நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் காட்பாடி, வேலூர், கணியம்பாடி ஆகிய 3 வட்டாரங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் அருகே மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசாமதி அடைந்தார். சிறப்பு என்னவென்றால் இவரின் சமாதி மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. மடாதிபதி மட்டும் உள்ளே இறங்கி பூஜை செய்வார். இங்கு ஆவணி உத்திரத்தன்று குருபூஜை சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் உங்களுக்குத் தெரிந்த சிறப்பு வாய்ந்த இடங்களை கமெண்ட பண்ணுங்க..தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கலை அருங்காட்சியகம் ஆகும், இது சர் சி.பி. ராமசாமி ஐயர் வாழ்ந்த 400 ஆண்டுகள் பழமையான வீட்டில் அமைந்துள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள், கற்சிலைகள், பாரம்பரிய உடைகள், கைத்தறி உடைகள், நகை மற்றும் உள்நாட்டு புத்தகங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 50,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் பயன்பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி-பிரிவு) அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.