India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) <
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரியார் காலனி கருப்பராயன் கோவில் அருகே தார் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகளிடம், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.126-ல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையை தீர்மானிக்க வேண்டும் என தூத்துக்குடியி எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் வரும் 24,26,29 ஆகிய தேதிகளில் திருச்சி – கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு – கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் 25ஆம் தேதி பாலக்காடு திருப்பூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சி – திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஏப்ரல் 23) செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் பங்கேற்றார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.
மதுரை : அரிசி மாவு, கேழ்வரகு மாவிற்கான ‘அக்மார்க்’ அங்கீகாரத்தை மத்திய அரசு முதன்முறையாக வழங்கியுள்ள நிலையில், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் மாவு வகைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற கூடுதல் விவரங்களுக்கு 96292 88369 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களில் இ-பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, ‘பூம் பேரியர்’ பொருத்தப்பட்டு, கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில் விரைவில் பூம் பேரியர் பயன்பாட்டிற்கு வரும். அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் போது, இ-பாஸ் பெறும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி முறையில் ‘பூம் பேரியர்’ சோதனை செய்து வாகனங்களுக்கு வழிவிடும்.
நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41ஆவது ஆண்டுக்கான கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாமானது, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. பயிற்சி நாளன்று தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 93822 07524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறையின் கீழ், மாநிலம் முழுவதும் ஜவகர் சிறுவர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஜவஹர் சிறுவர் இல்லங்களில் பணிபுரியும் 56 பயிற்றுநர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை துணை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.