Tamilnadu

News March 24, 2025

திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் சம்பளம்… இன்றே கடைசி நாள்

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பாக பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 4 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். <>விண்ணப்ப படிவத்திற்கு இதை கிளிக் செய்யவும். <<>>

News March 24, 2025

ஈரோட்டில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

மாட்டு வண்டி மீது பைக் மோதி விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 24) அதிகாலை 5 மணிக்கு ஈச்சம்பட்டை சேர்ந்த சரவணன்(40) கூலி தொழிலாளி, அவருடைய மனைவி மற்றும் அக்காவுடம் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றனர். அப்போது வண்ணமங்கலத்தில் மாட்டு வண்டி தீடிரென திரும்பியதால் மாட்டு வண்டி மீது பைக் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

News March 24, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

image

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 56 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். <>இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

நெல்லை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் டிஇஐசி. டி- அடிக்சன் பிரிவில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உளவியல் கவுன்சிலர், தொழில்நுட்ப அலுவலர், சோசியல் ஒர்க்கர் உள்ளிட்ட 6 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இல் பதிவு செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஏப் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

News March 24, 2025

கோவையில் வேலை வாய்ப்பு! இன்று கடைசி நாள்

image

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு <>விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

News March 24, 2025

சனி தோஷம் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர் கோவில்

image

சனி பகவான் மற்ற கோவில்களில் தனி சந்நிதியிலோ நவக்கிரகங்களிலோ இருக்கும் போது சனி மூலவராக உள்ள கோவிலாக குச்சனூர் சனீஸ்வரர் கோவில் திகழ்கிறது.இங்கு சனி லிங்க வடிவில் காணப்படுகிறார். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபட்டால் சனி தோஷம் நீங்கி நன்மைகளை பெற முடியும்.சனி பகவானுக்கே ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.ஷேர் பண்ணுங்க

News March 24, 2025

ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்து மாற்றம்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.25 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் சூலக்கரை சென்று தான் செல்ல வேண்டும். SHARE IT 

News March 24, 2025

களம்பூர் அருகே விவசாயி உடல் மீட்பு 

image

களம்பூரை அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி இவரது மனைவி கல்பனா, கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பதகராறு காரணமாக மனைவி தனது தாய் வீடான வேலூருக்கு சென்று விட்டார். இதனால் சிவக்குமார் மட்டும் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று  சிவகுமார்  ரத்தகாயங்களோடு உயிரிழந்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூர் போலிசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2025

செங்கல்பட்டில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம்

image

தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் செங்கை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.

error: Content is protected !!