Tamilnadu

News March 24, 2025

குடியாத்தம் அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி பலி

image

குடியாத்தம் நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் அம்சம்மாள் (70). இவர் அதே கிராமத்தில் உள்ள குட்டையில் நேற்று மாலை அவரது கால்களை கழுவுவதற்காக தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

திருப்பத்தூர்: வங்கியில் ரூ.1.30 கோடி மோசடி

image

திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42. இவர் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார். 2011- 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. புகாரின்பேரில் திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.

News March 24, 2025

குமரி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 24) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி, கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 103வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது#காலை 10:30 மணிக்கு தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி கொடுப்பதை கண்டித்து ராணி தோட்டம் TNSTC தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் CITU ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 24, 2025

புதிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரை வங்கி கடனுதவி!

image

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News March 24, 2025

“2026ல் தமிழகத்தை ஆளப்போகிறோம்”

image

வரும் மார்.28ல் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை பாபு சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘ பொதுக்குழுவில் கூட போறோம் – 2026இல் தமிழகத்தை ஆளப்போகிறோம்’ ‘ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டுள்ளன.

News March 24, 2025

நேருக்கு நேர் பைக்குகள் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வி.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 35; இவர், நேற்று மாலை தனது பைக்கில் கூகையூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார், அப்போது கடலுார் மாவட்டம், வேப்பூரை சேர்ந்த வேலுசாமி, 34; என்பவர் ஓட்டி வந்த பைக், சண்முகம் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த சண்முகம், கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

News March 24, 2025

வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

image

படப்பை அருகே மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. இவர் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, பைக்கில் சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதுார் – மணிமங்கலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

News March 24, 2025

ஈரக் கையுடன் சார்ஜ் போட்ட சிறுமி உயிரிழந்த சோகம்

image

சென்னையை அடுத்து எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஓட்டுனர் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14). கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வு நெருங்கும் நிலையில் படித்து வந்த இவர் இவர் கடந்த சனிக்கிழமை ஈர கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

News March 24, 2025

தூத்துக்குடி: 50 ஆண்டுகளுக்குப் பின் MGR படம் ரீ-ரிலீஸ்!

image

மறைந்த நடிகர் எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் 1973ஆம் ஆண்டு வெளியானது. தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் நேற்று(மார்ச் 23) ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News March 24, 2025

கொல்லிமலை: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 

image

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து கொல்லி மலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

error: Content is protected !!