India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாடிப்பட்டி விராலிப்பட்டியை சேர்ந்தவர் சிவா-பவித்ரா தம்பதி. இவர்களுக்கு சாய்குமார் (8), சிவகார்த்திக் (4) ஆகிய 2மகன்கள் உள்ளனர். நேற்று பவித்ரா வீட்டில் சமையல் செய்த போது வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் சிவகார்த்திக் திடீரென மயமானார். தேடி பார்த்தபோது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் சிவகார்த்திக் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் சுமார் 1 கிலோ அளவிலான கஞ்சா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வீரமணி (27), அபிஷேக் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசியை சேர்ந்த கணேஷ் முத்துக்குமார் (36), முருகப்பெருமாள் ( 27), ரமேஷ் (24), சக்திவேல் (28), அலெக்ஸ் சற்குணம் (27), பாளையங்கோட்டை சேர்ந்த முத்துக்குமார் (26) ஆகியோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின் படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை 24-03-2025 வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஆயல் கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கும் உறவினரான ஜோதிஸ்வரன் 22 என்பவருக்கும் மார்ச் 24ம் தேதி திருமணம் நடக்க இருந்தது இந்த தகவல் மாவட்ட சமூக நலத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது பாணாவரம் போலீசார் சமூக நலத்துறை அதிகாரிகள் வருவாய்த் துறையினர் குழந்தை உதவி மையப் பணியாளர் இணைந்து இன்றிரவு திருமணத்தை தடுத்து நிறுத்தினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 23 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாழைபந்தல் வாலாஜா கொண்டபாளையம் அவளூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மார்ச்.23) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.