Tamilnadu

News March 24, 2025

நாகையில் இலவச ஒவிய பயிற்சி

image

நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ள பொன்னி சித்திர கடல் ஆர்ட் அகடாமியில் ஒவிய திறனை வெளிக்கொணரும் வகையில் திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டு இலவசமாக ஓவிய பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு Nagai Art Academy என்ற சமூக வலைதளத்தை பின்பற்றி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 24, 2025

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

image

வெள்ளியங்காடு அடுத்துள்ள பில்லூர் அணை மாட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு  மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

image

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

News March 24, 2025

தி.மலை அருகே தவறி விழுந்து பெயிண்டர் பலி

image

சென்னை கிழக்கு தாம்பரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (38), பெயின்டர். இவர், தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்செட்டிபட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தண்டராம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2025

மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

image

ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மார்ச்.22 அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களையும் அவர்கள் விசாரித்து ராமேஸ்வரம் திரும்பிச் செல்லும் படி எச்சரித்து அனுப்பினர். அதன் பின் அவர்கள் இந்திய எல்லைகுள் மீன்களை பிடித்து நேற்று கரை திரும்பினர். இது குறித்து மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை.

News March 24, 2025

சேலம்; காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

image

ஈரோடு மாவட்டம் சித்தார்கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டரான யுவராஜன் (வயது 34). இவர் நேற்று தனது நண்பர்களான மேச்சேரி பகுதியை சேர்ந்த 3 பேருடன் கூனாண்டியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். யுவராஜன் ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 24, 2025

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

image

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசன்(30) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க கரும்பு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சிலம்பரசன் பார்க்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2025

நீலகிரி: கழுத்தை நெரித்து மனைவியைக் கொன்ற கணவன்

image

நீலகிரி: எருமாடு திருமங்கலம் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணன் – கல்யாணி தம்பதி. தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர்களில் கல்யாணி கடந்த மார்ச் 21ஆம் தேதி காலை உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஜெயபாலன் நாராயணனிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் கழுத்தை கயிற்றை கொண்டு இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து நாராயணன் (50) தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 24, 2025

திண்டுக்கல்: ஆபாசமாக பேசிய பாஜக தலைவர் கைது 

image

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்த பா.ஜ.க மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடுமையாக பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அதில், அவரது கட்சியைச் சேர்ந்த எல்லைதுரை என்பவரின் மனைவி புவனேஷ்வரி குறித்து தான் கனகராஜ், அவதுாறாக பேசியுள்ளார் என போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கனகராஜை கைது செய்தனர்

News March 24, 2025

பூட்டிய வீட்டில் துர்நாற்றம் தாய், மகன் சடலமாக மீட்பு

image

திருமுல்லைவாலை சேர்ந்தவர் வசந்தா, அவரது மகன் சங்கர். நேற்று முன்தினம், இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்க கதவை உடைத்து பார்த்தபோது, வசந்தா கட்டிலிலும் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்துகிடந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில் வசந்தா ஆஸ்துமா காரணமா இறந்ததும், அந்த சோகத்தில் சங்கர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

error: Content is protected !!