India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புளியறையில் அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சிவனுக்கு வலது பின் திசையில் நவநீத கோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர்சந்திரன், சப்த கன்னிகள் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். திருமணத்தடை நீங்க, கல்வி, வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் சிறந்து விளங்க இங்கு வேண்டலாம். *ஷேர் பண்ணுங்க*
நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் குலசேகரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கி குலசேகரநாதபுரம் தெற்கு நோக்கி சிவகாமி அம்மனும் அருள் புரிகின்றனர். இந்த ஆலயத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கி திருமண வாழக்கை அமையும். குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியமும், கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த தம்பதியினர் வேண்டினால் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*
ராமநாதபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு பண்டம் தொதல். இது இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. தேங்காய்ப்பால்,பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது சரும அழகினை மேம்படுத்தும். முன்னர் விசேஷ காலங்களில் மட்டுமே செய்யப்பட்ட தொதல் தற்பொழுது ஆண்டு முழுவதும் கிடைக்கும் பண்டமாக மாறி உள்ளது.கீழக்கரை,பனைக்குளம் பகுதிகளில் தயாரிக்கும் தொதல் மிகவும் பிரபலமானவை.Share.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும், வால் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் ‘டாஸ்மாக் ஊழல்’, அந்த தியாகி யார்?, 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இது திமுகவை தாக்கி அடிக்கப்பட்ட போஸ்டர் என்று, மக்களால் பேசப்படுகிறது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை கண்டுபட்டியில் மேற்கூரை கூட அமைக்கப்படாமல் அமைந்துள்ளது குடியிருப்பு காளியம்மன் கோயில். அம்மனின் வலது புறத்தில் புற்றும், இடதில் துர்க்கையம்மன் சன்னதியும், எதிரே 500 ஆண்டு பழமையான நாவல் மரமும் தல விருட்சமாக காட்சியளிக்கும்.முகத்தில் சரும பிரச்னை நீங்க கண்ணாடி கட்டுவதும், குழந்தை வரத்திற்கு முந்தானையை கிழித்து தொட்டில் கட்டுவதும், திருமணமாகாதவர்கள் வளையல் வாங்கி கட்டுவதும் ஐதீகமாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதாக 218 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.*நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்
கள்ளசாராய வழக்கில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனி, தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று(மார்.22) ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட்டதன் மூலம் மீண்டும் பார்வை பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்போதும் கூட, கண் பிரச்சனைகள் உள்ள எவரும் இங்குள்ள பெருமாளை வழிபட்டால் அது குணமாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பிரஹ்தன ஸ்தலம் இது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குமரகோட்டம் முருகன் கோயில். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. பொதுவாக பெருமாளுக்குத் தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகம் குடைபிடித்த படி இருப்பதை காணலாம். திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதிகளை கொண்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை 06-04-2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, இறுதி கட்டப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா .கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Sorry, no posts matched your criteria.