India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை எஸ்.பி அலுவலகம் வெளியிட்டுள்ளது.*இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிர்ந்து உதவவும்*
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று 23.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.*இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்*
புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச் 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. பாதுகாப்பை உறுதி செய்ய பகுதிகளாக ரோந்து பணி நடைபெற்று வருகிறது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (23/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – துர்க்கைசாமி (9498183251), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனக கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இது 2000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு கிடைக்க, பதவி உயர்வு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் இங்கு பிராத்தனை செய்கின்றனர். மேலும், இந்த வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். நீங்களும் விசிட் பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.