India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் அரசு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்படுகிறது. இளம் வல்லுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம் ரூ.50,000/- மாதம். விண்ணப்பத்தினை (Resume) ddsooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று 23ஆம் தேதிக்குள் அனுப்பப்படவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9445458078, 9487908820 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருச்சியில், நாம் பார்க்க வேண்டிய இடங்கள். காவிரி, கொள்ளிடம் சங்கமிக்கும் முக்கொம்பு அணை, பசுமை மிகுந்த பச்சமலை, கரிகாலன் கட்டிய கல்லணை, புளியஞ்சோலை, திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை, புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயில், 1000 ஆண்டு பழமையான நாதிர்ஷா தர்கா, அறிவியல் கோளரங்கம், சமயபுரம் மாரியம்மன் கோயில் என ஏராளமான இடங்கள் உள்ளன. உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க..
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலியானார். புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்தை சேர்ந்த முத்து அடைக்கலம் என்பவர் எதிர்வாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்ட மக்களே இந்த சம்மர்க்கு வெளில எங்கையும் அலையாம பக்கத்துலயே இருக்க இந்த ஸ்பாட்டுகளுக்கு ஒரு விசிட்ட போடுங்க
1.மேகமலை
2.வைகை அணை
3.சுருளி அருவி
4.குரங்கனி மலை
5.கும்பக்கரை
6.கொழுக்குமலை தேயிலை தோட்டம்
7.சின்ன சுருளி அருவி
8.கும்பக்கரை அருவி
9.சோத்துப்பாறை அணை
10.பேரிஜம் ஏறி இப்பவே உங்க நண்பர்களுக்கு இத ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சிறப்பு காவல்படை (TNUSRF) 9-ம் அணியின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் கரைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை தளவாய் கமாண்டன்ட் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை கமாண்டன்ட் உள்பட பலர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து கடந்த மாதம் கணினி பட்டா இல்லாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு முதல் தவணையாக 150 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பட்டாக்களை பயனாளிகளிடம் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.