Tamilnadu

News March 23, 2025

16 வகை செல்வங்கள் தரும் கோயில்

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள திருமலைக் குன்றின் மீதும் ஒரு உச்சிப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதிக்குச் செல்ல 16 படிக்கட்டுக்கள் உள்ளன. இந்த 16 படிகளை ஏறி இவரை வணங்குபவர்களுக்கு 16 வகை செல்வங்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *மற்றவர்களுக்கும் பகிருங்கள்*

News March 23, 2025

தி.மலையில் மழைக்கு வாய்ப்பு

image

தி.மலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். SHARE பண்ணுங்க.

News March 23, 2025

ஈரோடு சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு!

image

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 12ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நாளைக்குள் (24ஆம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக் செய்யவும்<<>>.

News March 23, 2025

திருச்சுழியில் பாண்டிய மன்னன் புதைக்கப்பட்ட கோவில்

image

இறந்த மன்னர்களின் அஸ்தி மேல் கட்டப்படும் கோவில்கள் பள்ளிப்படை எனப்படுகிறது.இது போல நிறைய கோவில்கள் சோழ நாட்டில் உள்ள நிலையில்,பாண்டிய நாட்டின் ஒரே பள்ளிப்படை கோவிலாக திருச்சுழி அருகே பள்ளிமடம் சிவன்கோவில் உள்ளது.மன்னர் சுந்தர பாண்டியன் இறந்த பிறகு தம்பி வீரபாண்டியன் இந்த கோவிலை கட்டி “திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோவில்” என பெயர் சூட்டியுள்ளார்.ஷேர் பண்ணுங்க

News March 23, 2025

நாகை: மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

image

நாகை மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப்பள்ளியின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் 2025-ஆம் ஆண்டு முதல் வகுப்பு சேர்க்கை மாணவர்களை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் ஆகியோர் (22.03.2025) வரவேற்றனர். இதில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் துரைமுருகு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

News March 23, 2025

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். SHARE பண்ணுங்க.

News March 23, 2025

திருமருகலில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

image

திருமருகல், புத்தகரம் லயன்ஸ் சங்கம் மற்றும் எஸ்.கே மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் காசி அறிவழகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபாலசங்கர், பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

News March 23, 2025

படகை இழந்த மீனவருக்கு ஆறுதல் கூறிய எம்.பி

image

சீர்காழி,புதுப்பட்டினம் ஊராட்சி பழையாறு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது விசைப்படகு கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் எரிந்து சேதமடைந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே பழையாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.பி சுதா மீனவர் கோவிந்தனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு வங்கி கடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

News March 23, 2025

தூத்துக்குடி கடலில் அமைந்துள்ள சூப்பர் தீவு

image

தூத்துக்குடியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது முயல் தீவு. கடலுக்கு நடவே அமைந்துள்ள இந்த தீவு கொள்ளை அழகு என போய் வந்தவர்கள் கூறுகிறார்கள். கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பான உறைவிடமாக காணப்படும் முயல் தீவு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பொங்கலுக்கு மறுநாள் நாள் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. குடும்பத்தினருடன் சென்றால் நிச்சயம் மகிழ்ச்சியாய் இருக்கலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*

News March 23, 2025

சேலம் மக்களே இந்த டைம்ல வெளியே போகாதீங்க!

image

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை எட்டி வெப்பக் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வெயிலில் சோர்வு, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

error: Content is protected !!