Tamilnadu

News March 23, 2025

இனிமையான வாழ்க்கை தரும் கரும்பு முருகன்

image

முருகனை வேலுடன் கண்டிருப்பீர்கள் ஆனால் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக்கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும். மேலும் இனிமையான வாழ்க்கைத் துணை அமைவார்கள் என்ற ஐதிகம் உள்ளது. கல்யாணத்திற்கு பெண்/பையன் தேடும் உங்களுக்கு தெரிந்தவர்களை இந்த கோயில் குறித்து SHARE பண்ணுங்க…

News March 23, 2025

சேலத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் விமான நேரம் மாற்றம்.

image

சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சேலம் ஹைதராபாத்துக்கு இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானம் அதன் நேர அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. இண்டிகோ விமான பயணம் ஹைதராபாத்தில் இருந்து 10.45AM புறப்பட்டுப் 12.35பின் சேலத்தில் இருந்து 12.55 PM புறப்பட்டு 14.50 PM சென்றடைய உள்ளது. இதனை இண்டிகோ விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 23, 2025

செங்கையில் பசுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது பெற வேண்டிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் செங்கல்பட்டு கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

News March 23, 2025

கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் சிறப்புகள்

image

பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில் விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க இக்கோயிலுக்கு அழைத்து செல்வது, பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இங்கு அர்ச்சனை செய்து பின்னர் தேர்வு எழுத செல்வது இங்கு வழக்கம். தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு SHARE செய்யவும்

News March 23, 2025

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருச்சி மாவட்டம் மறுக்காளம்பட்டியை சேர்ந்த சகாதேவன்(48) என்பவர் கூலி வேலை பார்த்து வந்த சூழலில், திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது சகாதேவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அளிக்கப்பட்ட தகவளின் அடிப்படையில், இது குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 23, 2025

தேனியில் இலவச இருசக்கர வாகன பழுது பார்த்தல் பயிற்சி

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மார்ச் 24ம் தேதி முதல் நடைபெற உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் பயிற்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முடிந்து 45 வயதிற்குள் உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் பெற இந்த 04546-251578 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News March 23, 2025

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுர ரகசியம் தெரியுமா?

image

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 4 கோபுர வாசல்கள் உண்டு. இவ்வழியாக சமயக்குரவர்கள் நால்வர் வந்து வழிபட்ட சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து சிதம்பரம் நடராஜப் பெருமானை வழிபட்டனர்கள். இதுவே சிதம்பர கோபுர ரகசியமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 23, 2025

புதுக்கோட்டையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

image

புதுக்கோட்டையில் சுற்றிப் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்: ▶️சித்தன்னவாசல் (ஓவியங்கள்) ▶️கொடும்பாளூர்(ஐவர் கோயில்) ▶️காட்டு பவா பள்ளிவாசல் ▶️ஆவூர் தேவாலயம் ▶️ஆவுடையார்கோவில் ▶️திருமயம் கோட்டை ▶️மலையடிப்பட்டி (குகைகோயில்- ஓவியங்கள்) ▶️திருக்குன்றக்குடி ▶️ குடிமியான்மலை (குடவரை கோயில்) ▶️ நார்த்தாமலை (கற்கோயில்). உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!